தமிழ்நாட்டின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான வீடு மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மூன்று இடங்களிலும், கரூரில் நான்கு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது அரசு பங்களாவில் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.  தற்போதைய மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அதில் 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார்கள் கொடுக்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ டிவிட்டரில் டிரெண்ட் செய்த அதிமுக - காரணம் என்ன?


இதனையடுத்து இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வரை இந்த விசாரணை சென்றது. பின்னர், அது தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நடைபெற்ற அமலாக்க துறை சோதனை ஆனது 17 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.  அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாரா அல்லது விசாரணைக்கு மட்டும் அழைத்து செயல்படுகிறார என்பது கேள்விக்குறியாக உள்ளது.



இந்த நிலையில் நுங்கம்பாக்கம் அழைத்துச் செல்லும் வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காரில் நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தினர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.  மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் பார்ப்பதற்காக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியம், ஏ.வா வேலு, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் மருத்துவமனையில்  வருகை தந்துள்ளார்கள்.  மேலும் அவசர சிகிச்சை பிரிவை மத்திய அதிவிரைவு படை போலீசார் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். மருத்துவமனைக்கு வெளியே சென்னை போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.


இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோதனைகள் முடிவில் தலைமைச் செயலாக அறையில் மற்றும் வீடுகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கோப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.  இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ