நேற்று நடைபெற்ற 17 மணி நேர அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகு செந்தில் பாலாஜியை தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல முயன்றது அமலாக்கத்துறை.  அப்போது செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வழி ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லபட்டார். ஆஞ்சியோ சிகிச்சை செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டு வந்தது.  தற்போது ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கையை மத்திய எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு அனுப்பி அடுத்த கட்டம் குறித்து யோசித்து வருகிறது அமலாக்கத்துறை.  முதல்வர் முக ஸ்டாலின் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார்.  இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை தமிழக முதல்வர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அரசியல் சாயம் பூசாமல் சட்ட நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும். அதனை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டுமே தவிர நாடகம் போட கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை பட்டின பக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்படும்போது நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.  பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்றவாறு நேற்று இரவு செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  கடந்த இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்துள்ளார் தமிழக முழுவதும் சட்டவிரோதம் மதுபான கூடங்களை 24 மணி நேரமும் நடத்தி பணம் சம்பாதித்துள்ளார். ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார் அவருக்கு பேரே 10 ரூபாய் பாலாஜி என மாறிவிட்டது.


மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி கைது? நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!


அண்ணா நகர் மோகன் வீட்டில் சோதனை நடைபெற்ற போது முதல்வர் ஏன் அமைதியாக இருந்தார் அப்போது ஏன் எதுவும் சொல்லவில்லை ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்றவுடன் மட்டும் ஏன் நள்ளிரவில் ஆலோசனை செய்கிறார். முதல்வரின் குடும்பம் பற்றிய அனைத்து தகவல்களும் செந்தில் பாலாஜிக்கு தெரியும் அதனால் தான் அவரை பாதுகாக்க துடிக்கிறார்.  நேற்று காலை நலமாக நடைபயிற்சி மேற்கொண்டவர் நள்ளிரவில் நெஞ்சுவலி என்று கூறுகிறார்.நெஞ்சு வலியின் போது காவல்துறையினரை காலால் எட்டி உதைக்கிறார். நெஞ்சுவலியால் துடிப்பவர் எப்படி காவல்துறையினரை காலால் எட்டி உதைக்க முடியும் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அரசியல் பழிவாங்கும் நிகழ்வாக செந்தில் பாலாஜி கைதை பார்க்க கூடாது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது சட்டம் தன் கடமையை செய்து கொண்டிருக்கிறது சட்டப்படி தான் எதிர் கொள்ள வேண்டும். சட்டப்படி எதிர்கொள்ள திறன் இல்லாமல் நாடகம் போடக்கூடாது என்று கூறி உள்ளார். 


மேலும், மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஒன்றிய பா.ஜ.க. அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்துகொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.  மேற்கு வங்காளம், புது டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. நடத்திய அரசியல் சித்து விளையாட்டுகளை தமிழ்நாட்டிலும் அரங்கேற்றுவதற்கு திட்டம் தீட்டி, அதைச் செயல்படுத்த முனைந்திருக்கிறது.  அதன் ஒரு பகுதியாகத்தான் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்திற்குள் அமலாக்கத் துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.


தமிழ்நாடு மின்சாரத் துறை மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாக தெரிவித்தும்கூட, விசாரணை முடிந்து, எந்தவிதமான சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் நள்ளிரவில் அவரைக் கைது செய்து துன்புறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.  ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை. இதனை திராவிட முன்னேற்றக் கழக அரசு முறியடிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.


மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ