செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காட்டமாக பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார். ‘பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்கிற பக்குவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் இல்லையென்றால் அவர் பல விஷயங்கள் பற்றி பேசி நேரத்தைக் வீணடிக்க வேண்டாம். நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை அவர் பதலளிக்கவில்லை. எனவே அவர் பற்றிய கேள்விகளை செய்தியாளர்கள் தவிர்த்துவிடலாம்’ என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை ஈச்சனாரியில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியின் மேடை அமைக்கும் பணியை பார்வையிட்ட பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழக முதல்வர் அவர்கள் 23 ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார். 24 ஆம்தேதி ஈச்சனாரி பகுதியில் நடைபெற உள்ள பிரம்மாண்டமான விழாவில், ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்தியாவிலேயே ஒரே மேடையில் இத்தனை பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படப்போவது இந்த மேடையில் தான்’ என்றார்.


‘தமிழக மின்சார வாரியம் மூலம் மத்திய அரசுக்கு  70 கோடி நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி பெற்று, மின்சார வாரியம் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, போர்டலில் சரிபார்க்கும் வசதியையும், செலுத்தக் கூடிய தொகைக்கு சரிவர கணக்கு வைத்து கொள்ளும் வசதியையும்  ஏற்படுத்த  வலியுறுத்தப்படும்’ என்று செந்தில் பாலாஜி கூறினார்.


‘மேலும் நாம் 70 கோடி கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசு தடை போடுகிறது. ஆனால் அவர்கள் பல்வேறு துறைக்கு வழங்ககூடிய நிலுவை தொகைகளை காலம் தாழ்த்தி கொடுக்கிறார்கள். அதை நாம் எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை.’ என்றார் அவர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக தான் பார்க்க முடியும் என குற்றம் சாட்டிய செந்தில்பாலாஜி, மின்சார சட்டதிருத்த மசோதாவிற்க்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றார்.


மேலும் படிக்க | ஐந்தரை அறிவு எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி - ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆவேசம் 


‘ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இது என்ன அரசியல் கபட நாடகமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். மேலும் மத்திய அரசு ஒரே நிலைப்பாட்டில் செயல்பட வேண்டும். அண்ணாமலை வேலை வெட்டி இல்லாத ஒரு நபர். நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் அவர் சொல்லவில்லை. ஊடகங்களை சந்தித்து எதாவது பேச வேண்டும் என்று பேசுகிறார். நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கொடுக்கவில்லை என்றால், இனிமேல் அவர் பற்றி கேள்வி கேட்பதைக் தவிர்த்து விடலாம்’ எனத் தெரிவித்தார்.


‘அண்ணாமலை  சொல்வதைக் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்கிற பக்குவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் இல்லையென்றால் அவர் பற்றி பேசி நேரத்தைக் வீணடிக்க வேண்டாம்’ என தெரிவித்தார்.


சென்னை பெரும்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மின் கட்டணம் தொடர்பான குற்றசாட்டுக்கு பதிலளித்த செந்தில்பாலாஜி, ‘இரண்டு வருடம் சலுகைகளை அனுபவித்து கொண்டு அப்போதெல்லாம் மின் கட்டணம் செலுத்தாமல், இப்போது சொன்னால் அது ஏற்று கொள்ளமுடியாது. கடந்த கால அரசு செய்த தவறைக் நாம் தொடர முடியாது’ என கூறினார். மேலும் மிகுந்த கடனில் தவிர்த்து கொண்டிருக்கின்ற மின்சார வாரியத்திற்க்கு கூடுதல் நிதி ஒதுக்கி மின்சார வாரியத்தை சரிவர நடத்தி வருகிறார் தமிழக முதல்வர் என அமைச்சர் குறிப்பிட்டார்.


மேலும் மாற்றுகட்சியிலிருந்து  முக்கிய நபர்கள் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, கோவையில் வருகின்ற 24 ஆம் தேதி முதல்வர் கலந்து கொள்ளும் பொதுகூட்டத்தின்  மேடையில் யார் இருப்பார்கள், கீழே யார் இருப்பார்கள் என்று நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என்றார். செந்தில் பாலாஜி நடத்திய 


இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சமீரன்,மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணைமேயர் வெற்றிச்செல்வன்,  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


மேலும் படிக்க | நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் -கனிமொழி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ