கோவையில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை!

கோவையில் முதுகலை பட்ட படிப்பு படிக்கும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 19, 2022, 12:06 PM IST
  • மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை
  • சான்றிதழ்கள் பெற முடியாமல் தற்கொலை
கோவையில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை!

கோவையில் முதுகலை பட்ட படிப்பு படிக்கும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பிரவின் அன்னதத்தா (33) இவர் எம்பிபிஎஸ் (இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல்) அங்குள்ள மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரியில் முதுகலை பட்டத்தில் மருத்துவ பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

மேலும் படிக்க | இந்தியர்களின் உத்தேச ஆயுள் 1951இல் 32... 2022இல் 70

இவர் கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பயின்று வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மருத்துவ கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்  மருத்துவ கல்லூரி மாணவருக்கு அவரது பெற்றோர்கள் தொலைபேசி வாயிலாக அழைத்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை, இதனையடுத்து சந்தேசகம் அடைந்த பெற்றோர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க | 41 மில்லியன் ஆண்டுக்கு முன் செக்ஸ் செய்யும் போது பிசினில் சிக்கி இறந்த ஈ கண்டு பிடிப்பு!!

அப்போது கல்லூரி மாணவர் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பந்தய சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர் ஏற்கனவே படித்து முடித்த சான்றிதழ்கள் பெற முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | முக ஸ்டாலின் நேற்றைய அரசியல் வரலாறு 2092: முதல்வரை பாராட்டும் பார்த்திபன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

மேலும் படிக்க | கிராமங்களுக்குள் படையெடுக்கும் ஈ கூட்டம்.! தொற்று பரவும் அச்சத்தில் மக்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News