தீபாவளி, பொங்கல், ஆங்கில வருட பிறப்பு போன்ற நாள்களில் மது விற்பனை என்பது வழக்கத்தை விட அதிமாக இருக்கும். அவை விடுமுறை நாள்கள் என்பதை தாண்டி, பல்வேறு தரப்பினரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது, வேறு இடங்களுக்கு பயணம் செய்வது என நெருங்கியவர்களுடன் மது அருந்துவது இந்ந நாட்களில் அதிகரித்து காணப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, தமிழ்நாட்டின் டாஸ்மாக்கில் மது விற்பனை அத்தகைய தினங்களிலும், அதற்கு முந்தைய, பிந்தைய நாள்களிலும் சூடு பறக்கும். இதனால், அந்த குறிப்பிட்ட நாள்களில் நடக்கும் டாஸ்மாக்கின் மொத்தம் வியாபரம் குறித்து அறிந்துகொள்ள பலரும் ஆர்வமாய் இருப்பார்கள். 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால், முதல் நாள் வசூல், முதல் வாரம் வசூல் என்பது போன்று, டாஸ்மாக் விற்பனையை பொங்கல் வசூல், தீபாவளி வசூல் என்று அழைக்கும் நிலைமை ஏற்பட்டது. இவை மண்டலம் வாரியாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகும். எந்தெந்த மாவட்டங்கள் மது விற்பனையில் கொடிக்கட்டி பறக்கின்றன போன்ற தகவல்களும் தெரிவிக்கப்படும். 


மேலும் படிங்க | கோவை வெடிவிபத்து : நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு... இதுவரை 5 பேர் கைது!


அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக்கின் வியாபாரம் குறித்த தகவல்கள் வெளியாகின. தீபாவளி தினத்திற்கு முந்தைய நாள் டாஸ்மாக் வியாபரம் குறித்து தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. 



இந்த செய்தி உண்மைக்கு புறம்பான ஒன்று எனவும், தவறான தகவல் வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டில்,'தீபாவளிக்கு முன்பாக ‘டாஸ்மாக் இலக்கு’ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, அதனைச் சுட்டிக்காட்டிய பிறகு தனியார் தொலைக்காட்சி நீக்கியது. தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.


அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும்  வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதால் தனியார் தொலைக்காட்சி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என குறிப்பிட்டுள்ளார். 


எனவே, அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | உஷார் மக்களே... இன்று 170 ரயில்கள் ரத்து - ஊருக்கு பாத்து போங்க...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ