திருவள்ளூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஆய்வுக்கு சென்ற போது குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்பதாக குடிமகன் சொன்ன புகாரின் பேரில் கடைக்கு சென்று விசாரிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பணம் பத்து செய்யும், போதை நூறு செய்யும் என்பார்கள். அதுபோல, குடிபோதையில் நிகழாத சம்பவங்களே இருக்க முடியாது. நண்பர்கள் குடிக்க அழைத்ததற்காக அம்போவென லாரியை விட்டுச்சென்ற சம்பவம் கிருஷ்ணகிரி அருகே நடைபெற்றுள்ளது.
சென்னை அண்ணா நகர் உள்பட பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பார்கள் 24 மணி நேரமும் செயல்படும் நிலையில் அவை ஆளும் கட்சி புள்ளிகளுக்கு சொந்தமானது என்பதால் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேருந்தில் மாணவிகள் மது குடிக்கும் சீரழிவைத் தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆயத்தீர்வை செலுத்தாத மது பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அதன் விற்பனைத் தொகை எங்கு, யாருக்கு செல்கிறது?-அன்புமணி ராமதாஸ்
மாற்று வருவாயைப் பெருக்காமல் டாஸ்மாக் கடைகளை மட்டுமே நம்பி ஒரு அரசாங்கம் செயல்படுவதை என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
"பாட்டில் பிரியர்களுக்கு குரல் கொடுத்த பாஜக தலைவருக்கு நன்றி.. நன்றி.. நன்றி,,!" என மதுகுடிப்போர் சங்கம் சார்பாக என அண்ணாமலைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.