கீழடி & திருமலை நாயக்கர் அரண்மனை: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகிய இருவரும் இன்று ஆய்வு செய்தனர். தொல்லியல் துறை அமைச்சராக பொறுபேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதன் முறையாக கீழடிக்கு வந்து ஆய்வு மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகிய இருவரும் இன்று ஆய்வு செய்தனர். தொல்லியல் துறை அமைச்சராக பொறுபேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதன் முறையாக கீழடிக்கு வந்து ஆய்வு மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்புவனம் யூனியனின் கீழடி ஊராட்சியில், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சார்பில் 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடத்தப்பட்டுள்ளன. ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது.கீழடியின் பூமியில் தோண்டத் தோண்ட நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
நமது முன்னோர்கள் பயன்படுத்திய கற்கோடாரி, செப்பு பொருட்கள், இரும்பு கத்தி, ஆபரணங்கள், மண்ணாலான பொருட்கள், பகடைக் காய்கள், சங்கு வளையங்கள், எடை கற்கள் உள்ளிட்ட 16 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அவற்றை அமைச்சரும் அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
Also Read | TASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
அதேபோல் மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனையை பார்வையிட்ட தொல்லியல் துறை அமைச்சர், இந்த அரண்மனை எட்டு கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களை அவற்றின் பழமை மாறாமல், தமிழர் நாகரீகம் மற்றும் பண்பாட்டை உலகறியச் செய்யும் வகையில் அரண்மனை வளாகத்தில் 8 கோடி ரூபாய் செலவில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தின் வரலாற்றுச் சுவடாக இருக்கும் திருமலை நாயக்கர் அரண்மனையை புதுப்பித்து மெருகூட்டப்படும். முதற்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும், அரண்மனைக்கு வெளியே கற்சிற்பங்களுடன் கூடிய பூங்கா, பழமையைவெளிப்படுத்தும் நூலகம் ஆகியவும் அமைக்கப்படும்.
அமைச்சர் ஆய்வுகளை மேற்கொண்டபோது, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
Also Read | Multi-crore Fraud: பல கோடி ரூபாய் மோசடியில் சென்னை தொழிலதிபர் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR