Multi-crore Fraud: பல கோடி ரூபாய் மோசடியில் சென்னை தொழிலதிபர் கைது

இந்தியாவின் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றில் தொடர்புடைய IL&FS குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான ரவி பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 12, 2021, 10:17 AM IST
  • பல கோடி ரூபாய் மோசடியில் சென்னை தொழிலதிபர் கைது
  • IL&FS குழுமத் தலைவர் ரவி பார்த்தசாரதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்
  • 200 கோடி ரூபாய் இழந்த ஒரு நிறுவனம் கொடுத்த புகாரின் அடிபப்டையில் நடவடிக்கை
Multi-crore Fraud: பல கோடி ரூபாய் மோசடியில் சென்னை தொழிலதிபர் கைது title=

இந்தியாவின் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றில் தொடர்புடைய IL&FS குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான ரவி பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார்.

பொருளாதார மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த Infrastructure Leasing & Financial Services குழுமத்தின் தலைவருமான ரவி பார்த்தசாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவின் (Economic Offences Wing (EOW)) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுயாதீன இந்தியாவின் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றைச் செய்ய IL&FS மற்றும் அந்த குழுமத்தின் 300 நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டன என்று பொருளாதார குற்றப்பிரிவு கூறுகிறது. 

2020 செப்டம்பர் 28 தேதியன்று அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரவி பார்த்தசாரதி தலைமையிலான ஐ.எல் அண்ட் எஃப்எஸ் குழுவின் நிர்வாகம், நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

Also Read | தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்; யாருக்கு இ-பாஸ் அவசியம்.. விபரம் உள்ளே 

இந்த மோசடியில் 200 கோடி ரூபாயை இழந்த 63 Moons Technologies Limited என்ற நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசியின் பிரிவு 409, 420 r/w 120 பி மற்றும் தமிழகத்தின் வைப்புத் தொகையாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் (TNPID (Tamil Nadu Protection of Interests of Depositors)) சட்டத்தின் 5 வது பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 
பணம் டெபாசிட் செய்த மேலும் பலர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் (EOW-II) சென்னையால் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, இதே கிரிமினல் வழக்கிற்காக, இந்த மோசடியில் தொடர்புடைய வேறு சில குற்றவாளிகளை EOW கைது செய்து ரிமாண்ட் செய்தது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக இருந்த ஹரி சங்கரன் மற்றும் ராமச்சந்த் கருணாகரன், ரவி பார்த்தசாரதியின் நெருங்கிய உதவியாளர்களாக இருந்தனர், இவர்கள் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட ரவி பார்த்தசாரதி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கைது செய்யப்பட்ட அவர் சென்னை டி.என்.பி.ஐ.டி (TNPID ) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை கைது செய்த தகவலை பதிவு செய்த நீதிமன்றம், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியது.  

Also Read | ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு: புதிய தளர்வுகள் என்னென்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News