கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கீழடியில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி முழுவீச்சில் நடக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் ஒரு குழியில் தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்யும்போது அழகிய வேலைபாடுகளுடன் அடங்கிய சுடுமண் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 



இது பார்ப்பதற்கு அழகிய கண்கள் மற்றும் நெற்றி கொண்ட பெண் போன்ற அமைப்பை உடையதாக‌ தெரிகிறது.மேலும் தற்போது நடந்து வரும் கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்துள்ள முதல் சுடுமண் சிற்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


 



மேலும் இந்த சுடுமண் சிற்பத்தின் புகைப்படத்தை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதில், “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? அழகர் மலை அழகா இல்லை இந்த சிலை அழகா?” என்று குறிப்பிட்டுள்ளார்.இது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.


மேலும் படிக்க |10, 11, 12 மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி பொதுத் தேர்வு


இச்சிற்பத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யும்பட்சத்தில் இதனுடைய முழு விவரம் குறித்தும் தெரியவரும் என்று தொல்லியல் துறை‌ ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


மேலும் படிக்க | இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துரையாடல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR