தமிழகம் முழுவதும் 500 இடங்களில் பனை விதைகள் சேகரிப்பு பணி தொடங்கியது. மன்னாா்குடி அருகே தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விதைகள் சேகரிக்கும் பணியை தொடங்கி வைத்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக கடற்கரையோரங்களில்  தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு,  நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நட திட்டமிட்டுள்ளன. இந்த பணிக்கான பனை விதைகள் சேகரிக்கும் முகாம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த காரியமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உண்டியலில் ரூ.100 கோடி செக்! சாமிக்கே அல்வா கொடுத்த பக்தர்-அதிர்ந்து போன அர்ச்சகர்கள்!


இதில் கலந்து கொண்ட தொழில்நுறை அமைச்சர் டிஆர்பி ராஜா, பனை விதைகள் சேகரிப்பு பணியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது, தமிழக முதல்வரின் ஆணைப்படி தமிழ்நாட்டின் பசுமை பரப்பை 33 விழுக்காடாக உயர்த்த தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கடலோர மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை கிரீன் நீடா அமைப்பு முன்னெடுத்துள்ளதாகவும், இதில் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளதாக அவர் கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், மாநில மரமான பனைமரத்தை வெட்டுவது சட்டோவிரோதமான செயல். மரத்தை வெட்டுவோர் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். "தமிழ்நாட்டின் பசுமை பரப்பை 33 விழுக்காடாக உயர்த்த தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது கடலோர மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை கிரீன் நீடா அமைப்பு முன்னெடுத்துள்ளது. இதில் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர். இது கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்படுகிறது. உலக சாதனை நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது. மாநில மரமான பனைமரத்தை வெட்டுவது சட்டோவிரோதமான செயல். மரத்தை வெட்டுவோர் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்" என எச்சரித்தார்.


மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி... உடனே பிரஸ்மீட்டில் பேசிய இபிஎஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ