நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரி திமுக இளைஞர் அணி சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் கலந்து கொண்ட திமுக இளைஞரணிச் செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்துக்கு தன்னுடைய கையெழுத்தையும் பதிவிட்டு பேசினார். அவர் பேசும்போது நீட் விலக்கு அளிக்ககோரி திமுக எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்பில் அதிமுகவும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும் படிக்க | Weather: அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம்.. மக்களே எச்சரிக்கை!


முட்டை மதிப்பெண் போதும்


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, " நீட் தேர்வு குறித்த தமிழ்நாடு அரசின் மனதை புரிந்துகொள்ள ஒன்றிய அரசு மறுக்கிறது. நீட் விலக்கு மசோதா 21 மாதங்களாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக காத்துக் கிடக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் நீட் தற்கொலைகள் தொடர்கிறது. நீட் வந்தால் தரமான மருத்துவர்கள் வருவார்கள். மருத்துவப் படிப்புக்கு பணம் தேவையில்லை என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், தற்போது நீட் முதுநிலை படிப்பு தகுதித்தேர்வில் 'முட்டை' மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்கிறார்கள்.


அதிமுகவுக்கு அழைப்பு


ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் இந்த 'நீட் விலக்கு' கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம். நீட் ஒழிப்புக்காக சேர்ந்து போராட அதிமுகவும் வாருங்கள். அதற்கான கிரடிட்டை நீங்களே கூட எடுத்துக் கொள்ளுங்கள். நீட் ஒழிந்தால் போதும். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஒன்றும் செய்ய இயலவில்லை என்றீர்கள். தற்போது கூட்டணியை விட்டு வெளியேறி விட்டீர்கள். எனவே நீட்டுக்கு எதிராக போராட முன்வாருங்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமைக்கான இந்த கையெழுத்து இயக்கத்தில், அதிமுகவும் பங்கேற்று கையெழுத்திட வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.


அதிமுக நிலைப்பாடு என்ன?


தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி திமுக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டு மாணவர்கள் எளிமையாக மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்த நிலையில், நீட் தேர்வு அதற்கு பெரும் தடை கல்லாக மாறிவிட்டது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பும், மருத்துவ கல்வியும் மிகச்சிறப்பாக இருந்து வரும் சூழலில் இதனை தமிழ்நாட்டு மாணவர்கள் நன்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் இந்த நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதிமுகவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே நீட் தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டியதாகிவிட்டது என்ற விளக்கம் அளித்து வருகிறது.


மேலும் படிக்க | ஆயுதபூஜையை முன்னிட்டு தாம்பரம், பூந்தமல்லியில் இருந்து அரசு பேருந்துகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ