பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அமைச்சரால் டாஸ்மாக்கிற்கு விதிக்க முடியவில்லை - அண்ணாமலை
பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அமைச்சரால் சாராய வியாபாரிகளின் கேள்விக்கு பயந்து டாஸ்மாக்கிற்கு தடை விதிக்க முடியவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மன் என் மக்கள் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை அடுத்த தாம்பரம் அருகே காமராஜபுரம் வந்த அண்ணாமலைக்கு பா.ஜ.க வினர் கலை நிகழ்ச்சிகளுடன் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, மத்திய அரசின் திட்ட நகலாகதான் தமிழக அரசின் பட்ஜட் இருப்பதாகவும், பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ள திட்டங்களை பெயர் மாற்றி தமிழக அரசு திட்டங்களாக அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சாமான்யர்கள் வாய் திரக்க மாட்டார்கள் என்பதால் கேன்சர் வரும் என கூறி பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அமைச்சர் மா.சுப்ரமணியம், சாராய வியாபாரம் கெடும் என டி.ஆர்.பாலு போன்றவர்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதால்தான் டாஸ்மாக்கிற்கு தடை விதிக்கவில்லை என்றார்.
அதேபோல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க கூடாது என்பதற்காக திராவிட கட்சிகள் மறைமுக தொடர்பு வைத்து செயல்படுவதாகவும், திராவிட ஆட்சியின் அவலங்கள் நீங்கி தமிழகம் செழிக்க பா.ஜ.க விற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். மேலும் டெல்லியில் போராடி வரும் விவாசியகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய பாஜக அரசை கண்டிச்து கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"டெல்லி சலோ" என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதி தமிழர் பேரவை, தமிழக வாழ்வுறிமை கட்சியினர் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் படிக்க | TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ