மதிமுகவுக்கு புத்தெழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கான தேர்தல் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு இளைஞர்களிடையே சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழக அரசியல் வரலாற்றில் எந்தவொரு கட்சியாலும் செய்ய முடியாத பல்வேறு பணிகளை மதிமுக செய்திருக்கிறது. தனியொரு இயக்கமாகவும், வருங்கால தலைமுறைகள் வாழ தமிழகத்தின் வளங்களை பாதுகாக்கவும் வைகோவின் தன்னலமற்ற உழைப்பு இளைஞர்களிடம் நன் மதிப்பைப் கொடுத்து உள்ளது என கூறினார்.
மேலும் படிக்க | TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன?
இதற்கு சென்னையில் நடந்த இளையோர் தேர்தல் பயிலரங்க கூட்டமே சாட்சி என்றும் துரை வைகோ தெரிவித்தார். 1996ல் இருந்த கட்சியின் எழுச்சியை மதிமுக இளையோர் அரசியல் பயிலரங்கத்தில் காண முடிந்ததாக கூறிய அவர், பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று தெரிவித்தார். பாஜக அதிமுக கூட்டணியை உடைத்து எதிர் கட்சிகளின் வலிமை இழக்க செய்துவிட்டார் அண்ணாமலை. அதனால் தான், அவரை நான் திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று சொல்கிறேன் என்று பேசினார்.
மேலும், தேர்தல் நேரத்தில் எவ்வாறு விழிப்புடண் கடமையாற்ற வேண்டும், பூத் கமிட்டிகளில் இருக்கும் கட்சியினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார் துரை வைகோ. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர். மதிமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்சும் நோக்கில் செயல்பட்டு வரும் துரை வைகோ, தேர்தல் பயிலரங்க கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக கட்சி பணி ஆற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ