இயற்கை பல விநோதங்களையும், அதிசங்களையும் கொண்டது. இந்த பூமியில் எத்தனையோ மர்மங்கள் நிறைந்துள்ள நிலையில், அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் மனித இனமும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இந்த பிரம்மாண்ட இயற்கையில் புரிந்துகொள்ள முடியாத தாவரவியல் பிரிவில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்துகொண்டே வருகின்றன. அதன்படி, வட மாநிலங்களில் எப்படியாவது பாதுகாக்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு நினைக்கும் பூ ஒன்று, சர்வசாதாரணமாக அன்னூரில் உள்ள ஒரு வீட்டின் செடியில் பூத்திருப்பதென்பது இயற்கையின் அதிசயமல்லவா.!. பொதுவாகவே, பூக்கள் என்பது நாகரீக மனிதனின் மனங்களுக்கு நெருக்கமானவை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Loggerhead turtles: பருவநிலை மாற்றம்: பூமியின் வடக்குப் பகுதியில் நீண்டதலை ஆமைகள்


ஒரு ‘பூ’ எத்தனையோ நினைவுகளையும், செய்திகளையும் நமக்கு கடத்துகிறது. காதலைச் சொல்லவும், ஒரு பிரியாவிடை கொடுக்கவும், ஒரு வாழ்த்து சொல்லவும், ஏன் ? கதைகளில் கூட பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. ‘அனகோண்டா’ படத்தில் போர்னியா தீவுக்குள் பூக்கும் அதிசயப் பூவைத் தேடி விஞ்ஞானிகள் குழு செல்லும். அப்போது, அனகோண்டா பாம்பிடம் சிக்கி விஞ்ஞானிகள் படும் துயரமே கதை. இந்த அபாயகரமான தீவும் வேண்டாம், காடும் வேண்டாம் என்று விஞ்ஞானிகள் குழு வீட்டுக்குத் திரும்ப முடிவெடுக்கும் போது, அவர்கள் கண்ணில் அந்த அதிசயப் பூ தென்படுகிறது. அதை அங்கேயே விஞ்ஞானிகள் விட்டுவிட்டு வீடு திரும்புகின்றனர்.  இந்தக் கதையின் மையமே அந்த அதிசயப் பூ தான்.! 


இதுமாதிரி உலகில் அதிசய மலர்கள் மலர்ந்துகொண்டே இருக்கின்றன. கேரள மாநிலம் மூணாறில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரைக் காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுப்பதுண்டு. அதேபோல், உத்தரகண்ட் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அதிசய மலராகவும் உள்ள பிரம்ம கமலம் மலரைக் காண்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவதுண்டு. இந்த பிரம்ம கமலம் பூவிற்கு பல சிறப்புகள் உண்டு. இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்க கூடியது. மாலை 7 மணிக்கு மேல் இரவு நேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த பூ பூக்கும். 


மேலும் படிக்க | சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் 125 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன


நள்ளிரவு நேரத்தில் செடியில் இருந்து பூ மலரத் தொடங்கும். மலர்ந்த பிறகு இரண்டே மணி நேரத்தில் உதிர்ந்துவிடும். அதாவது, விடியலுக்கு முன்பே உதிர்ந்துவிடும் தன்மையுடைய பூவிது. இதன் வாசனை நிகர் வேறில்லை என்பார்கள். அந்த பகுதி முழுவதும் நறுமணத்தை வீசக்கூடிய அதிசயப் பூ இது.! இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையைச்சோ்ந்தது என கூறப்படுகிறது. இந்நிலையில், உலக வெப்பநிலை மாறுபாட்டால் இந்த பூ அழிந்துவரும் தாவரப்பட்டியலில் உள்ளது. இதனை எப்படியாவது பாதுகாப்பதற்காக உத்தரகாண்ட் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அப்படிப்பட்ட இந்தப் பூ, கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் கோவர்தன் என்பவரது வீட்டில் பூத்துள்ளது. 3 ஆண்டுகளாக வெறும் செடி மட்டுமே வளர்ந்த நிலையில், தற்போது திடீரென பூ மலர்ந்துள்ளது. விடிவதற்குள்ளாகவே பூ உதிர்ந்துவிடும் தன்மையுடையதால், நள்ளிரவு நேரத்தில் வெண்ணிலவைப் போல இந்தப் பூ காட்சியளித்து வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், கோவர்தன் வீட்டிற்கு வந்து பூவிற்கு வழிபாடு செய்து வருகின்றனர். பலர் ஆச்சரியத்துடன் வந்து பூவுக்கு ஆரத்தி எடுத்தும், திருவாசகம் பாடியும் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் பலர் பூவுடன் செல்ஃபி எடுத்தும் வருகின்றனர். இந்த பூ விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | குறுந்தொகையில் இடம்பெற்ற நைட்ரஜன் அறிவியல் ஆராய்ச்சி.!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR