சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் 125 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன

"ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் 125க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாம்பூச்சிகள் உள்ளதாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 22, 2021, 01:48 PM IST
சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் 125 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன  title=

ஈரோடு: "ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் 125க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாம்பூச்சிகள் உள்ளதாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தியமங்கலம் தாளவாடி அடுத்துள்ள தலமலை வனப்பகுதியில் பல்வேறு அமைப்புகள் இணைந்து மரம் நடுகின்ற விழா மற்றும் அங்குள்ள பொதுமக்களுக்கு வனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிலம்பம் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தலமலை வனச்சரகர் சுரேஷ் தலைமை வகித்தார்.வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். பின்பு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட "பறவைகள் ஆராய்ச்சியாளர் ரவிக்குமார் பேசுகையில் இந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் "125க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன.

ALSO READ: "மெல்ல மெல்ல வரலாற்றில் காணாமல் போவோம்” : ஆப்கான் பெண்ணின் உருக்கமான வீடியோ

இந்த வண்ணத்துப்பூச்சிகள் தாவரங்களுடைய மகரந்த சேர்க்கைக்கு பெரிய அளவில் உதவி புரிகின்றன.இதன் காரணமாக மரங்கள்,செடிகள், கொடிகள் வளர்ந்து காடு செழிப்பாக உள்ளது.யானைகளும் இங்கு இடம்பெயர்வதால் காடுகள் செழித்து வளர்கின்றன.

இதற்கு என்ன காரணமென்றால் யானை உணவு உண்டு முடித்துவிட்டு அது இடக் கூடிய சாணத்தில் "300க்கும் மேற்பட்ட விதைகள் அந்த சாணத்தில் உள்ளது.இதனால் சாணத்தில் உள்ள விதைகள் மழைக்காலங்களில் நன்றாக செழித்து வளர்கின்றன.காடுகளும் இதன் காரணமாக செழிக்கிறது.

பறவைகளின் எச்சம் பல இலட்சக்கணக்கான மரங்கள் உற்பத்தியாக காரணமாக அமைகிறது.வனங்களை பாதுகாப்பதில் சிறு பூச்சி முதற்கொண்டு பெரு விலங்குகள் வரை மிகப் பெரிய அளவில் பங்கு வகிக்கின்றன.எனவே வனங்களை பாதுகாக்க மனிதர்களாகிய நாமும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.

Also Read | 'கண்ணுக்கு தெரியாத சக்தியால்' மனிதன் இழுக்கப்படுவதைக் காட்டும் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News