அரசு ஊழியர்களுக்கு 34 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு! முழு விவரம்!
அரசு அலுவலர்கள், ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று நாட்டின் 75வது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா். பின்பு பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். முக ஸ்டாலின் பேசியதாவது, " ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலை படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச் சுமைக்கு இடையிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.7.2022 முதல் அகவிலைப்படி 31% இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர், அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும். மேலும் மாநில அரசின் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் படிக்க | Happy Independence Day 2022: சுதந்திர தினத்தில் வாழ்த்து சொல்ல சிறந்த கவிதைகள்!
வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருதுபாண்டியர் சகோதரர்களின் வழித்தோன்றல்கள், முத்துராமலிங்க விஜயர குருநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், வ உ சிதம்பரனார் வழி தோன்றுகளுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ஒன்பதாயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக வழங்கப்படும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு கால தொடர்பு பங்களிப்பு குறித்து எதிர்கால சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய விடுதலை நாள் அருங்காட்சியம் ஒன்று சென்னையில் விரைவில் கட்டப்படும்" என்று கூறினார்.
மேலும் படிக்க | இந்தியாவிற்கு இன்று 75வது சுதந்திர தினமா? அல்லது 76? குழப்பங்களுக்கு எளிய விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ