முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் - தேசிய விருதாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து
தேசிய விருது வென்றவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
2020ஆம் ஆண்டு தமிழில் திரையரங்குகளில் 85 படங்களும், ஓடிடி தளங்களில் 24 படங்களும் வெளியாகின.
இந்தச் சூழலில் கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு தள்ளிப்போனது.
இந்நிலையில் தற்போது 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 30 மொழிகளில் இருந்து மொத்தம் 305 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டன.
இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அதே படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளியும் பெற்றிருக்கின்றனர்.
சிறந்த படமாக சூரரைப் போற்று தேர்வாகியுள்ளது. அதுமட்டுமின்றி அப்படத்துக்கு இசையமைத்ததால் ஜிவி பிரகாஷும் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
இதுபோக, தமிழின் சிறந்த படத்துக்கான விருதை வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் பெற்றது.
அதேபோல், சிறந்த துணை நடிகைக்கான விருதை அந்தப் படத்தில் நடித்த லட்சுமி சந்திரமௌலி பெற்றிருக்கிறார். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் தேசிய விருது வென்றுள்ளார்.
மேலும் படிக்க | மேனேஜரால்தான் சூர்யாவுக்கு தேசிய விருதா?... சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை
தேசிய விருது பெற்றவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “68ஆவது தேசிய விருதுகளில் விருதுகளைக் குவித்துத் தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா,சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ், அபர்ணாவுக்கு வாழ்த்துகள். வசந்த், லட்சுமி, ஸ்ரீகர் பிரசாத் ஆகியோருக்கும் வாழ்த்துகள். அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ’யாருமே சரியில்லை’ விமர்சகர்களுக்கு தேசிய விருது கொடுக்காத ஜூரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ