வாய்ப்புகளை தமிழகத்துக்கு கொடுங்கள் - செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
இதுபோன்ற வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தர வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடையில் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.
செஸ் தொடர்களில் மிகப்பெரிய தொடராக கருதப்படுவது செஸ் ஒலிம்பியாட். செஸ் விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க முயற்சி செய்து அது தோல்வி அடைந்ததால் செஸ் ஒலிம்பியாட் தோற்றுவிக்கப்பட்டது. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நடக்கிறது. இதனையொட்டி தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசின் ஏற்பாடுகள் சர்வதே செஸ் வீரர்கள் பலரை கவர்ந்துள்ளது. இன்று செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்,அனுராக் தாக்கூர் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் தீபத்தை கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஏந்திவந்து முதல்வர் முக ஸ்டாலினிடம் கொடுத்தார். அதை இளம் கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்டோர் வாங்கி விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினர்.
இதனையடுத்து மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடிக்கு செஸ் மிகவும் பிடித்த விளையாட்டு. அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது 20000 செஸ் வீரர்களை வைத்து மிகப் பெரிய போட்டியை நடத்தினார். இது போன்ற வாய்ப்புகளை தொடர்ந்து தமிழகத்துக்கு தாருங்கள் கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கமுடியவில்லை. இதை நான் தொலைபேசியில் தெரிவித்தபோது கண்டிப்பாக கலந்துக்கொள்வதாக பெருந்தன்மையுடன் தெரிவித்தார்” என்றார்.
மேலும் படிக்க | பிரதமர் முதல் சூப்பர்ஸ்டார்வரை - களைகட்டிய செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ