திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலையச் சரகம், தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரது மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமியால் சட்டபேரவையில் கவனஈர்ப்பு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்துள்ள தட்டரனை கிராமத்தில் வாழும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் சாராய விற்பனை வழக்கில் 26.4.2022 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு , பின் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாளே அதாவது 27.4.2022 அன்று காலை வலிப்பு வந்ததாகவும் , அன்று மாலையே இறந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சென்னையில் அரங்கேறிய சாத்தான்குளம் சம்பவம்! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்


தகவல் அறிந்தவுடன் அவரது மகன் தினகரன், தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் எடுத்துச் சென்று விட்டதாகவும் , மேலும் கலால் துறை காவலர்கள் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். பிறகு பணம் தர முடியவில்லை என்று கூறியவுடன் சாராய விற்பனை வழக்கில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளதாகவும் அவரது மகன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்ததற்கு காவல்துறையினர் தாக்கியதே காரணம் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் செய்ய சென்றபோது, அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும் , கடுமையான வாக்குவாதத்திற்கு பிறகு அனுமதிக்கப்பட்டதாகவும் இறந்தவரது மனைவி , மகன் மற்றும் உறவினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர் . இவ்வளவு சந்தேகங்கள் உள்ள மர்ம மரணத்தை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | அமைச்சர்தான் வம்புக்கு இழுக்கிறார் - சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!


இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தங்கமணி என்பவர் அவரது வீட்டில் விஷச்சாராயம் வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கடந்த 26-4-2022 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரைக் கைது செய்த போலீஸார், நீதித் துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து, அன்றையதினமே திருவண்ணாமலை கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். சிறையிலிருந்த தங்கமணிக்கு ஏப்ரல் 27 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு சுமார் 7.40 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8.40 மணியளவில் உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடல் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. நீதித்துறையின் நடுவர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றுள்ளது. அதன் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், உரிய விசாரணை நடத்தப்பட்டு, இந்த அவைக்குத் தெரிவிக்கப்படும்’ என்று விளக்கம் அளித்தார்.


மேலும் படிக்க | திராவிடர்களாக ஒன்றிணைவது அவசியம் - பா. இரஞ்சித்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR