கருணாநிதியை விட ஆபத்தானவர் மு.க.ஸ்டாலின் - ஹெச்.ராஜா
கருணாநிதியை விட ஆபத்தானவர் மு.க. ஸ்டாலின் இன்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி ஹெச். ராஜா கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் முடிவடைய போகிறது. ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. மேலும் அறநிலையத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறது.
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை, கோவில் நிலங்களை மீட்டு எடுப்பது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை இயற்றியுள்ளது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
திராவிட சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட திமுக ஹிந்துக்களுக்கு தொடர்ந்து அவதூறுகளை செய்து வருகிறது என H. ராஜா பலமுறை கூறியுள்ளார். சமீபத்தில் அவரது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு டிவிட்டர் ஸ்பேசில் அவர் பேசுகையில், "கருணாநிதியை விட ஆபத்தானவர் மு.க.ஸ்டாலின்" என்று கூறியுள்ளார். திமுக அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் H. ராஜாவின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் பத்திரிக்கையாளர்களை பற்றி சமீபத்தில் தவறுதலாக பேசிய H.ராஜா மீது கடும் கண்டனங்கள் எழுந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பில், செய்தியாளர்களுக்கு எதிராக தவறான வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தையை மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் பயன்படுத்தியுள்ளார். அர்த்தம் புரியாமல் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் வருத்தமான விஷயம்தான். நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிபீடியாவில் விளக்கம் உள்ளது. தமிழகத்தில் உடனடியாக அனைத்து நாட்களிலும் வழிபட கோயில்களை திறந்துவிட வேண்டும் என்று ஹெச். ராஜா கூறினார்.
ASLO READ சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR