குடியரசு தின விழாவில் தமிழக அரசு சார்பில் அணிவகுப்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது.  ஏனெனில் அதில் இடம்பெற்றிருந்த சுதந்திர போராட்ட வீரர்களான  வ.உசி, வேலுநாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள் ஆகியோர் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை என்றும், அவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்றும் அதனால் தமிழக ஊர்தியை நிராகரிப்பதாக மத்திய அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்தை நிராகரித்த மத்திய அரசு!


அந்த அலங்கார ஊர்தி முதல் மூன்று சுற்றுகளை கடந்து 4வது சுற்று வரை சென்ற நிலையில் நிராகரிக்கப்பட்ட சம்பவம், மக்களிடத்திலும், அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  மேலும் பல கட்சிகள் இதற்கு எதிராக கண்டனங்கள் எழுப்பியது.  இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "குடியரசு தின விழா அணிவகுப்பு வாகனத்தில் தமிழக வாகனம் புறக்கணிக்கப்பட்டதாக  கூறப்படும் முழு தகவலை கேட்டு விளக்கம் அளிக்கிறேன், மத்திய அரசிடம் பேசிவிட்டு தகவல் சொல்கிறேன்" என்று கூறினார்.  மேலும் தமிழக முதல்வரும் இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதப்போவதாகவும் தகவல்கள் வந்தது. 



இந்நிலையில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சி, மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றும், பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்யுமாறு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 



அந்த கடிதத்தில், தமிழக சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தியை நிராகரித்தது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கியது. 'சுதந்திர போராட்டத்தில் தமிழகம்;' எனும் கருத்தின் அடிப்படையில் நாங்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வீரர்களை ஊர்தியில் இடம்பெற செய்தோம்.  பிரிட்டிஷ் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் நம் நாட்டு இருந்தபோது இந்த தமிழக வீரர்கள் சிறப்பாக போராடினர்.  வ.உ.சி, மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோர்கள் நாட்டின் விடுதலைக்காக அரும்பாடு பட்டு பல தியாகங்களை செய்துள்ளனர்.  அத்தகைய வீரர்களின் படங்கள் இருந்த ஊர்தியை நிராகரித்தது தமிழகத்திற்கு பெரும் கவலையை அளித்திருக்கிறது.  அதனால் இதுகுறித்து விசாரணை நடத்தி தமிழக ஊர்தியை வாகனத்தை அணிவகுப்பில் பங்கேற்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கடிதம் எழுதியுள்ளார்.


ALSO READ | கோவையில் 21ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR