COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக தலைவரான பின்னர் முதன்முறையாக  பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நான் கருணாநிதி இல்லை; அவர் போல் பேசத் தெரியாது; பேசவும் முடியாது, எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு கொண்டவனாக இருக்கிறேன் என அவர் தனது உரையை துவங்கினார். கருணாநிதியின் மகன் என்பதைவிட தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என பேசினார். 



10:45 | 28-08-2018


திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு. மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம்.  



10:32 | 28-08-2018


திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தணிக்கை குழு அறிக்கையை சாமிநாதன் தாக்கல் செய்தார். 






09:40 | 28-08-2018


முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவு செய்தி கேட்டு மரணமடைந்த 248 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி என திமுக பொதுக்குழுவில் அறிவிப்பு...! 


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி...! 




09:36 | 28-08-2018


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு. 




09:34 | 28-08-2018


சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் மு.க.ஸ்டாலின். இதையடுத்து, மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி உருவப்படத்திற்கு தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்..! 



இன்று திமுக எனும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக பதவியேற்கும் மு.க. ஸ்டாலின்..! 


முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து, தற்போது திமுக-வின் தலைவருக்கான தேர்தல் இன்று நடத்தப்படவுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 26 ஆம் நாள் மாலை 4 மணிக்குள் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 


கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, திமுக பொதுக்குழு இன்று கூடும் என்று பொதுச் செயலாளர் அன்பழகன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதில், தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதில் கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.


இந்தத் தேர்தலில் வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாத நிலையில், கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொள்கின்றனர்.


இதில் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அன்பழகன் அறிவிக்க உள்ளார். இதனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.


இதன் மூலம் திமுகவின் 2-வது தலைவர் ஆகிறார் ஸ்டாலின். திமுக தொடங்கப்பட்ட போது, அதன் பொதுச் செயலாளராக அண்ணா பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி கட்சியின் தலைவரானார். தொடர்ந்து 50 ஆண்டுகள் தலைவராக அவர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது கருணாநிதியின் மறைவிற்கு பிறகு, கட்சியின் 2-வது தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்கள் இருவரையும் எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணிக்கு நடைபெறும் பொதுக்குழுவிற்கு உறுப்பினர்கள் வரத் தொடங்கினர்...!