ராகுலின் திட்டத்தால் ஏழைகள் நாட்டின் எஜமானர்கள் ஆவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆதரவை தெரிவிவ்த்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின், மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் என்ற ஏழைகளுக்கான குறைந்த பட்ச ஊதிய உறுதித்திட்டத்தை, திமுக சார்பில் மனதார வரவேற்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.


இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற ஜூன் 3ஆம் தேதிக்குப் பிறகு, ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள் என்ற நிலையை எட்டும் நிலை உருவாகும் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆண்டுக்கு 72, 000 ரூபாய் என்ற ராகுலின் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று பா.ஜ.க.வினர் விதண்டாவாதம் செய்வதாக ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.


நிதி அயோக்கின் துணை தலைவராக இருக்கும் ராஜீவ் குமார், பா.ஜ.க.வின் பரப்புரையாளராகவே மாறி, "செயல்படுத்த முடியாத திட்டம்" என்று சொல்வதாகவும், இது எரிச்சலின் வெளிப்பாடே தவிர துளியும் உண்மை அல்ல என்றும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.


"72 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்வோம்", "100 நாள் வேலை திட்டத்தை நிறைவேற்றுவோம்" என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்பு அறிவித்த போதும் பா.ஜ.க.வினர் இதே போன்று விஷமப் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.