ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் உடனடியாக ஆளுநர் விடுதலை செய்யவேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது..



"திரு ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்!" என குறிப்பிட்டுள்ளார்!