சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தை நிர்வகித்து வந்த ராம சமாஜம் அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி மண்டபத்தை கையகப்படுத்த இந்துசமய அறநிலையத்துறை கடந்த 2013-ம் ஆண்டு முடிவு செய்தது. இதனை எதிர்த்து இராம சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014 ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி வி.எம். வேலுமணி கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, அயோத்யா மண்டபம் நேற்று இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ராம சமாஜம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. முறைகேடு செய்ததற்கான முழுமையான ஆதாரங்கள் இல்லாமல் மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சட்ட விரோதம் எனவும் முறையாக நோட்டீஸ் கொடுக்காமலேயே காவல்துறையினர் அத்துமீறி மண்டபத்தை கையகப்படுத்தியதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 


மேலும் படிக்க | ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


தொடர் புகார்களின் அடிப்படையிலேயே மண்டபம் கையகப்படுத்தப்பட்டதாகவும், பக்தர்கள் தொடர்ந்து மண்டபத்துக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படும் எனவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 
விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென்றும், விரைவில் இறுதி வாதங்களை முன்வைக்கவும் தயார் என்றும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசும், அறநிலையத் துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 21-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதுவரை மேல்முறையீடு வழக்கில் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியது தொடர்பாக தமிழக சட்டபேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள் எனவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி இவை குறித்தெல்லாம் பேச வேண்டும் எனவும் விமர்சித்தார்.  


அயோத்த்திய மண்டபம் விவகாரத்தில் தேவையில்லாமல் அரசியலைப் புகுத்தி அதன்மூலமாக பாஜகவை பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டுமென்று நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்பதை 
அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 


மேலும் படிக்க | அரியலூர் மாணவி வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் -வானதி சீனிவாசன் கோரிக்கை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR