திமுக தளபதி இன்று தமிழகத் தலைவராகிறார்!! முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியலை பிறப்பு முதலே சுவாசித்து, நேசித்து, வாசித்து, தமிழகம் கண்ட மிகப்பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான மு. கருணாநிதியின் புதல்வனாகப் பிறந்து இன்று தமிழகத்தின் தலைவனாக உயர்ந்துள்ளவர் மு.க.ஸ்டாலின். மு.கருணாநிதிதியை தந்தையாகக் கொண்டு அபரிதமான அன்பைப் பெற்ற ஸ்டாலின், அவரை தலைவனாகக் கொண்டு அரசியலையும் கற்றுக்கொண்டார். சிறு வயதிலேயே களப்பணியாற்றி மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றார். திமுக கட்சியின், கட்சித் தொண்டர்களின் தளபதியாக இருந்து அவர்களை வழி நடத்திய மு.க. ஸ்டாலின், இன்று தமிழக மக்களின் தலைவனாக, மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். 


தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று திமுக வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் (MK Stalin) இன்று காலை தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். காலை 9 மணியளவில் மு.க. ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.


2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் (Tamil Nadu Assembly Elections 2021) மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், திமுக 133 இடங்களிலும், அதிமுக 66 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 14 இடங்களிலும், பாரதீய ஜனதா கட்சி 4, பாட்டாளி மக்கல் கட்சி 5, விடுதலை சிறுதைகள் கட்சி 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் வென்றன. 


இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் (Banwarilal Purohit) உரிமை கோரினார். அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் (MK Stalin) ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையொட்டி கிண்டி ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு முதலமைச்சராக பதவி ஏற்கிறார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளர். அவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர்.


கொரோனா தொற்று (Coronavirus) காரணமாக மிகச் சிலருக்கே இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் 300-க்கும் குறைவானவர்களே கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. 


ALSO READ: தமிழக முதலமைச்சராக நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்


முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். 


பொறுப்பேற்கும் முன்னரே செயலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின்


தேர்தலில் வெற்றி பெற்றவுடனேயே திமுக தலைவர் நேரத்தை தாமதிக்காமல் செயலில் இறங்கினார். தற்போது உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று குறித்த நிலையை ஆய்வு செய்தார் அவர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் உள்ளிட்டமூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். 


மேலும், தொற்று பரவல் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு சில அறிவுறுத்தல்களை ஸ்டாலின் வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகளும் தம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். மருத்துவ அவசர நிலை எனச் சொல்லக்கூடிய அளவுக்குத் தீவிரம் இருப்பதால் 'கட்டளை மையம்' ஒன்றை (War Room) உடனே தொடங்க தலைமைச் செயலாரிடம் உத்தரவிட்டுள்ளேன். ஆக்சிஜன் இருப்பு, படுக்கைகள் இருப்பு, தடுப்பூசி குறித்து தெரிந்துகொள்ள கட்டளை மையம் உதவும்'' என தெரிவித்துள்ளார்.


மாறும் காலத்திற்கேற்ற மாண்பு கொண்ட முதல்வர் 


காலம் மாறிக்கொண்டே உள்ளது. அதற்கேற்ப நாமும் நாடும் மாற வேண்டும் என்பதை தான் பொறுப்பேற்பதற்கு முன்னரே மு.க.ஸ்டாலின் எடுத்துக்காட்டியுள்ளார். மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் இலட்சியங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டும் சில துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. மாறிவரும்காலத்திற்கே ஏற்ப, பழமையின் கற்பித்தலோடு, புதுமையின் நவீனத்தை எடுத்துக்கொண்டு நல்லாட்சி புரியும் அரசாக இந்த அரசு இருக்கப்போகிறது என்பதை மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கை காட்டியுள்ளது.


ALSO READ: உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்-தமிழக அமைச்சகங்களின் பெயர் மாற்றம்: மு.க.ஸ்டாலின்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR