கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய திருவாரூர் செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆராய தமிழக முதல்வர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். அந்த வகையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மேற்பார்வையிட ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் செல்கிறார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் நாடு முழுவதும் குறைந்து வருகிறது. தமிழகத்திலும் படிப்படியாக தொற்றின் அளவு குறைந்துகொண்டு இருக்கிறது. தமிழக அரசும் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆராய தமிழக முதல்வர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். அந்த வகையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மேற்பார்வையிட ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) திருவாரூர் செல்கிறார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக இருந்த நிலையில், இரண்டாம் அலை தீயாய் பரவத் தொடங்கிய நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற நாள் முதலே தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா சிகிச்சை முறைகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என அனைத்துக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழக அரசு அனத்து தட்டுப்பாடுகளையும் படிப்படியாக சரி செய்து கொண்டு இருக்கிறது.
ALSO READ: FrontLine Workers: முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசு அறிவிப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய பல இடங்களுக்கு பயணித்தார். ஸ்டாலின், சேலம், கோயம்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தடுப்பூசி (Vaccination) தட்டுப்பாட்டை சரி செய்ய, தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தியை துவக்கும் பொருட்டு, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தார். அந்த உற்பத்தி மையத்தில் தடுப்பூசி உற்பத்தியை துவக்குவது குறித்து இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
அவ்வப்போது அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மெய்நிகர் சந்திப்புகளை மேற்கொள்கிறார். இந்த வரிசையில், திருவாரூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் 12 ஆம் தேதி அங்கு செலிக்கிறார்.
தமிழகத்தில் (Tamil Nadu) தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் மேலாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக படிப்படியாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், திங்களன்று தமிழ்நாட்டில் 19,448 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,56,681 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்று 1530 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 351 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 27,356 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று அரசு மருத்துவமனைகளில் 248 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 103 பேரும் உயிரிழந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR