FrontLine Workers: முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசு அறிவிப்பு

முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையை ரூ.160 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 8, 2021, 06:51 AM IST
  • முன்களப் பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை
  • அரசு ரூ.160 கோடி நிதிக்கு ஒப்பளிப்பு வழங்கி ஆணையிடுகிறது.
  • ஊரடங்கு காரணமாக தொற்று பரவல் சற்று குறைவு
FrontLine Workers: முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசு அறிவிப்பு title=

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஊரடங்கு காரணமாக தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் முன்களப் பணியாளர்களுக்கு (Frontline Workers) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) ஊக்கத்தொகை அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு (Tamil Nadu Government) வெளியிட்டுள்ளது. அதில்., 

ALSO READ | பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களே : மு.க. ஸ்டாலின் அறிவிப்பு​

கொரோனா தொடர்புடைய பணியில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்கள் தொடர்ந்து ஈடுபட்டுவரும் காலமுறை ஊதியத்துடன் கூடிய அரசுப் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். 

ஆனால் இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, ஒவ்வொரு துறை இயக்குநரும் தனித்தனியாக நிதித்துறையிடம் ஒதுக்கீடு கோரி, ஒப்புதலை பெற்று, தகுதியுடைய பணியாளர்களுக்கு நிதியை வழங்க காலதாமதம் ஏற்படும் என்று துறை இயக்குநர்களால் கருதப்படுகிறது.

இந்த நிலையில், தகுதியுள்ள பணியாளர்களுக்கு நிதித்தொகுப்பை வழங்குவதற்காக அரசு ரூ.160 கோடி நிதிக்கு ஒப்பளிப்பு வழங்கி ஆணையிடுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். அவர் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களிடம் இருந்து முன்மொழிவுகளை பெற்று வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையருக்கு உரிய நிதி ஒதுக்கீட்டுக்கான முன்மொழிவுகளை அனுப்புவார் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ALSO READ | Sero survey: தமிழகத்தில் 23% பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு: செரோ சர்வே

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News