முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையிலான நீண்ட கால சிக்கலாக தொடர்கிறது. இந்தப் பிரச்சனை தொடர்பாக, இரு மாநில முதலமைச்சர்களும் சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அண்டை மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கவனிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இரு மாநில மக்களின் நலனை பாதுகாப்பதை தமிழக அரசு உறுதி செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



அண்டை மாநிலமான கேரளாவில், முல்லைப் பெரியாறு அணையால் வெள்ள அபாயம் இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக   தமிழக அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. முல்லைப் பெரியார் அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ”கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, தமிழக அரசும், மக்களும் கவலை கொண்டு உள்ளனர். கடினமான இந்தக் கால கட்டத்தில், தமிழகம் கேரளவுக்கு  உறுதுணையாக இருக்கும்” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  


கேரள மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வோம் என்று கூறியிருக்கும் தமிழக முதல்வர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் இருந்து வெள்ள நிவாரணப் பொருட்களை தடையின்றி விநியோகம் செய்யுமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  


Also Read | மத்திய அரசிடம் திமுக அரசு அடிபணிந்து போவது ஏன்? சீறும் சீமான்


முல்லைப் பெரியாறு அணை அணையின் நீர்மட்டத்தைக் கூர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர், தமிழக அதிகாரிகள், கேரள மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 


இன்றைய (அக்டோபர் 27) நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.60 அடியாக இருக்கும் நிலையில், அணைக்கு விநாடிக்கு 2300 கன அடி நீர்வரத்து உள்ளது.


மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு நீராதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1887லிருந்து 1895ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கட்டப்பட்டது.


மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரள மாநிலத்திற்குள்  பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையான முல்லை பெரியாறு அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும், அணை தமிழகத்திற்கும் உரியது என்பதால் இந்த அணை, பிற அணைகளில் இருந்து மாறுபட்ட பிரச்சனைகளை எதிர்க்கொண்டுள்ளது.தற்போது, முல்லைப் பெரியாறு அணையின் பராமரித்து வருவது தமிழக பொதுப்பணித்துறை என்பது குறிப்பிடத்தக்கது.  


இந்த அணை தொடர்பாக அன்றைய, மெட்ராஸ் மாகாணத்திற்கும் திருவிதாங்கூர் மகாராஜவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி உருவான பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகை வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  


Read Also | கடவுள் தங்கத்தை உருக்காதே தமிழக அரசே! கையெழுத்து வேட்டை தீவிரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR