வேலூர்: தமிழக எதிர்கட்சித் தலைவரும்,, தி.மு.க பொருளாளருமான ஸ்டாலின் சென்ற கார் விபத்துக்குள்ளானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே ஸ்டாலின் சென்ற காரின் குறுக்கே மற்றொரு கார் வந்ததால் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.


தர்மபுரியில் திமுக மாவட்ட செயலாளர் சுப்பிரமணியின் மகன்  திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே ஸ்டாலின் கார் கடந்து சென்ற போது, முன்னால் சென்ற கார் மீது லேசாக மோதியது. தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தனர். காரில் சென்ற ஸ்டாலின் உள்பட யாருக்கும் காயமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தைத் அடுத்து எம்எல்ஏ காந்தி காரில் ஏறி ஸ்டாலின் தர்மபுரி புறப்பட்டுச் சென்றார்.