கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு நள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகின்றது. பிற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் ஊரடங்கால் சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது போன்று தமிழக அரசு (Tamil Nadu Government) பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி (Corona Vaccine) போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


ALSO READ | தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள்; எவையெல்லாம் இயங்கும்


இந்நிலையில் தமிழகத்திற்கு தடுப்பூசிகள் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது.,


தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்றவாறு அவர்களுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும். 


மாநிலங்களுக்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு 75 சதவீதம், மட்டரும் தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதம் என்ற விகிதத்தில் தற்போது உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாள் தேவையை விட அதிக கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படுகிறது. அதுவே அரசு மருத்துவமனைகளில் ஒருநாள் தேவையை விட குறைவான கொரோனா தடுப்பூசிகளே இருக்கின்றன. 


எனவே அரசு மருத்துவமனைகளுக்கான 90 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு 90 சதவீதம், தனியார் மருத்துவமனைகளுக்கு 10  சதவீதம் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை மாற்ற வேண்டும் என்று கடிதாதில் கூறியுள்ளார்.


ALSO READ | தமிழகத்தில் கூடுதலாக 23 மாவட்டங்களில் பஸ்கள் போக்குவரத்து தொடங்கியது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR