திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 2, 2024) திருச்சிக்கு வருகை தந்தார். தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடி, முதலில் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதில், 33 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். உயர்கல்வி துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொள்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எண்ணூர் போராட்டம்... இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக மாறிவிடக்கூடாது - சவுக்கு சங்கர்!


பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், பட்டம் பெறுபவருடன் ஒருவருக்கு மட்டுமே அனுமதி உள்ளது. பிரதமரின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு இடங்களும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். பிரதமரின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு இடங்களும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து ஆளுநர் ரவியுடன் ஒரே விமானத்தில் ஓ.பன்னீர்செல்வம் திருச்சிக்கு பயணம் மேற்கொண்டார். அதிமுக சார்பில் பிரதமரை சந்திக்கவோ வரவேற்கவோ யாரும் செல்லவில்லை என கூறப்படுகிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடியை வரவேற்க 7 இடங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மலர்கள் தூவி பாஜக தொண்டர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, சாலையில் நின்று காரில் இருந்தவாறு பொதுமக்களை நோக்கி உற்சாகமாக கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார். 


மேலும் படிக்க | புத்தாண்டு கொண்டாடுபவர்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ