கோவை: தமிழகத்தில் (Tamil Nadu) அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. கூட்டணிகள், கூட்டணி தலைமை, குற்றச்சாட்டு, குறை கூறல் என பல்வேறு விதமாக களம் களைகட்டத் தொடங்கி விட்டது. இந்த சூழலில், ஆட்சியைப் பிடிக்கும் ஆசையில் ஆவி பறக்கும் இட்லிக்களை மக்களுக்கு வழங்கி அவர்களது ஆசியைப் பெற பாஜக (BJP) புது முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“மோடி இட்லி” (Modi Idli)  – விரைவில் இவை தமிழகத்தின் சேலத்தில் வழங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பெயரிடப்பட்ட இட்லிக்கள், 10 ரூபாய்க்கு நான்கு கிடைக்கும். மூத்த பாஜக அதிகாரி ஒருவர் மூலம் தமிழகத்தின் சேலம் (Salem) மாவட்டத்தில் மக்களுக்கு இவை வழங்கப்படவுள்ளன. பாஜக பிரச்சார செல் மாநில துணைத் தலைவர் மகேஷின் சிந்தனையான இந்த முயற்சியை விளம்பரப்படுத்தும் ஒரு பகுதியாக நகரின் பல்வேறு பகுதிகளில் "மோடி இட்லி" சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.


சுவரொட்டிகளில் இடது பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் உள்ளது. நடுவில் '10 ரூபாய்க்கு நான்கு இட்லிகள்’ என எழுதப்பட்டுள்ளது. பாஜக பிரச்சார செல் மாநில துணைத் தலைவர் மகேஷின் புகைப்படமும் உள்ளது.



"தாமரை ஹீரோ மகேஷ் வழங்கும் மோடி இட்லி. சாம்பாருடன் நான்கு இட்லிக்கள் விரைவில் சேலத்தில் வழங்கப்படவுள்ளன. நவீன சமையலறை உபகரணங்களுடன் தயாரிக்கப்பட்டும் இவை, சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்" என்று பிரச்சார சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன.


சேலம், தமிழக முதல்வர் கே பழனிசாமியின் சொந்த மாவட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


பாஜக தமிழக ஊடக செயலாளர் பாரத் ஆர்.பாலசுப்பிரமணியன், இட்லிகளை விற்க ஆரம்பத்தில் 22 கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் வெற்றியைப் பொறுத்து விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார்.


ALSO READ: அன்லாக் 4-ல் தமிழகம்: வழிகாட்டுதல்களுடன் இங்கெல்லாம் தாழ் திறந்தது!!


ஒரு நாளைக்கு 40,000 இட்லிகளை தயாரிப்பதற்கான இயந்திரங்கள் ஏற்கனவே வந்துவிட்டன. பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.


மொத்தத்தில், விரைவில் தமிழகத்தின் சேலத்தில் ‘மோடி இட்லிக்கள்’ விற்கப்படவுள்ளன. சூடு பறக்கும் இட்லிக்களுடன் (Idli) தேர்தல் களமும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.