பக்கோடா விற்பது கூட பட்டதாரிகளுக்கான ஒரு வேலை வாய்ப்பு தான் என பிரதமா் மோடி கூறியதைத் அடுத்து புதுவை முதல்வர் நாராயண சாமி பக்கோடா விற்கும் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிப்போம் என்ற வாக்குறுதியை முன்வைத்து மத்தியில் ஆளும் பாஜக பெரும் வெற்றியை பெற்றது. எனினும் இதுவரை அதற்கான ஏற்பாடுகள் ஏதும் எடுக்கப்படவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் இதுகுறித்த எதிர்கட்சியின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி "அரசு வேலை மட்டும் வேலை இல்லை, பக்கோடா விற்பனை செய்வதன் மூலம் கூட தினம் நூற்றுக்கணக்கில் சம்பாதிக்கலாம்" என தெரிவித்தார்.


இதனையடுத்து இந்த விவகாரம் மேலும் பல சர்சைகளை உறுவாக்கியது. எதிர்கட்சியினர் உள்பட பலரும் நாடுமுழுவதும் இக்கருத்துக்கு எதிர்பு தெரிவித்தனர். வெடநாட்டில் பட்டதாரிகள் பட்டம் பெற்ற அங்கிகளுடன் பொதுயிடங்களில் பக்கோடா விற்று தங்கள் எதிர்புகளை காட்டினர்.


இந்நிலையில் இன்று புதுவை முதல்வர் வி நாராயனசாமி அவர்கள், பட்டதாரிகளுடன் பஜ்ஜி, பக்கோடா விற்று தங்கள் எதிர்பினை பதிவு செய்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்... பஜ்ஜி, பக்கோடா விற்பது கூட ஒரு தொழில் தான், ஆனால் பிரதமர் தனது கருத்தில் பக்கோடா விற்றால் கூட... என கூறி பக்கோடா விற்பனையாளர்களை உள்பட பட்டதாரிகளையும் வேதனை படுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார்!