தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் லாரி டிரைவர் ஆவார்.  இவரது மனைவி பெயர் கற்பகவல்லி. இவர்களுக்கு சண்முகபாண்டி என்கிற மகனும், தர்ஷினி என்கிற மக்கள் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கற்பகவல்லி தனது மகளுடன் அந்த பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு (Private Hotel) சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சிக்கன்கிரேவி வாங்கி வந்தனர்.அந்த உண்மை அவர்கள் வீட்டில் செய்து வைத்திருந்த உணவுடன் வைத்து சாப்பிட்டுள்ளனர்.


ALSO READ | பானிபூரியால் பெண் உயிரிழப்பு; சாலையோரக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


அப்போது லேசான வயிர் எரிச்சல் ஏற்பட்ட காரணத்தினால் அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி கற்பகவல்லி மற்றும் அவரது மகள் தர்ஷினி இருவரும் அருந்தியுள்ளனர். அதன்படி குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து அவர்களது உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.


அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இல்லமால் தாய் மற்றும் மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 


தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். அத்துடன் குளிர்பானம் மற்றும் கிரேவி வாங்கிய கடையில் விசாரணை நடத்தினர். 


இந்நிலையில் அவர்கள் சாப்பிட்ட சாப்பாடு மற்றும் குளிர்பானம் பாட்டில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர். சிக்கன் கிரேவி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


ALSO READ | ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR