பானிபூரியால் பெண் உயிரிழப்பு; சாலையோரக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

ஈரோட்டில் பானிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 28, 2021, 06:36 AM IST
பானிபூரியால்  பெண் உயிரிழப்பு; சாலையோரக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு மாவட்டம் என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம், இவரது மகள் ரோகிணி தேவி (34). பட்டதாரி இளம்பெண்ணான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மூன்று தினங்களுக்கு முன்பு ரோகிணி தேவிக்கு அவரது சகோதரர்கள் இருவர் பானிபூரி வாங்கி கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

அந்த பானிபூரியை (Pani Puri) சாப்பிட்ட ரோகிணி தேவி சற்று நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் உடற்சோர்வு காரணமாக படுத்து தூங்கிய அவர் மறுநாள் காலையிலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ALSO READ | பட்டதாரி பெண்ணின் உயிரை பறித்ததா பானிபூரி?

ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் மேற்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரோகிணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து ரோகிணியின் தந்தை, தனது மகள் பானிபூரி சாப்பிட்டு சிறிது நேரத்தில் வாந்தி எடுத்ததாகவும், அதை தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் ரோகிணி தேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இறப்புக்கான காரணம் கண்டறிவதற்காக உடல் உறுப்புகள் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பானி பூரிக்கடை மூடப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன் தினம் ஈரோட்டில் உள்ள சாலையோர பானிபூரி கடைகள், உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலாவதியான உணவு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சில சாலையோர கடைக்காரர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் உள்ளது தெரிய வந்ததுள்ளது. 

இதுகுறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அதிகாரி கூறுகையில், ரோகிணி தேவியின் உடற்கூறு பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே, அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். மேலும் பொதுமக்கள் உணவு சம்பந்தமான புகார்களை 9444042322 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.

ALSO READ | மனைவிக்கு அடி : இறந்த கணவன், பிழைத்த மனைவி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News