சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது பிறந்தநாள் நிகழ்சி புரட்சி சிங்கங்கள் அமைப்பின் தலைவர் சிரஞ்சிவீ தலைமையில் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு முத்தரையரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


அதை தொடர்ந்து சோழிங்கநல்லூர் எம்எல்ஏ எஸ்.அரவிந்த்ரமேஷ் அவர்களும் மலர் தூவி மறியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து புரட்சி சங்கங்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் கனிமொழி கருணாநிதிக்கு வீரவாள் வழங்கப்பட்டது.


பின்னர் மேடையில் பேசிய கனிமொழி கருணாநிதி :-


கி.பி 705ம் ஆண்டில் இருந்து 745 வரை 40 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்கூறிய ஒரு அரசர், தான் கண்ட 16 போர்களத்தில் வெற்றி வாகை சூடி இருக்கக்கூடிய ஒரு அரசர். நாம் கொண்டாடக் கூடிய மிகப்பெரிய தலைவர்.


தற்போது தமிழர்களின் பெருமையை ஒடுக்கிவிடலாம் என்றும் வெளியில் தெரியக்கூடாது என அனைத்தும் செய்து கொண்டிருக்கும் காலத்தில் அப்போதே அவர் தங்களுடைய பெருமைகளை கல்வெட்டில் செதுக்கி வைத்துள்ளார்.


இங்குள்ளவர்கள் எங்கள் உரிமை எங்கள் குரல் என பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் நாம் அனைவரும் ஒன்று, தமிழ் இனம் என்பதுதான் நாம் அனைவரையும் இனைத்து வைத்திருக்கிறது என்ற அந்த அடிப்படையிலேயே இதை விட பெரிய எதிரியை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம் என்றார். 


தமிழர்களின் தமிழ் மொழி தொண்மை வாய்ந்தது.  


மத்திய அரசு சமஸ்கிரதம் மொழி பேச கோடி கோடியாய் செலவு செய்கிறார்கள் ஆனால் அதை பேச ஆள் இல்லை, கோவிலில் வேண்டுமென்றால் பூஜைகள் செய்யலாம் ஆனால் பேச 1000 பேர்க்கு மேல் ஆள் இல்லை என்றார். 


மேலும் படிக்க | மீண்டும் இணைகிறது ஜெய் பீம் கூட்டணி... இந்த முறை எந்த சம்பவம்?


தொன்மையும் தொடர்ச்சியும் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி. அந்த தமிழனுடைய தமிழை பாதுகாக்கதான் திராவிட இயக்கம் அன்று தலைவர் கலைஞர் இன்று தளபதி அவர்கள் போரடி கொண்டிருக்கிறார்கள் என்பதை மனதிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். 


திமுக என்னைக்குமே வாக்கு வங்கி அரசியல் செய்தது இல்லை.


இலங்கையில் இருந்து வரும் சகோதர சகோதரிகளுக்கு வாக்கு வங்கி கிடையாது ஆனாலும் அவர்களின் உரிமைக்காக வாழ்க்கை மேம்படுத்த சிந்திக்கக் கூடிய ஆட்சி திராவிட முன்னேற்ற கழக ஆட்சி.


அண்ணன் தளபதி அரசு போராடிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு நம் மீது புகுத்தக்கூடிய புதிய கல்வி கொள்ளை என்பது நம்பிள்ளைகள் எல்லாம் மருத்துவ கல்லூரிக்கு செல்ல முடியாது.


எந்த கல்வி எடுத்தாலும் நுழைவு தேர்வை எழுதிவிட்டு உள்ளே செல்ல வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் இதையெல்லாம் எதிர்த்து நாம் போராட வேண்டிய காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம் அதனால் நாம் தனி தனியே போராடக்கூடிய நேரம் இது இல்லை.


 நாம் அனைவரும் ஒன்றாக திராவிடர்களாக சுயமறியாதைகாரர்களா தந்தை பெரியார் அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில் வந்தவர்களாக தளபதியோடு நின்று போராட வேண்டும் என்றார். 


உடன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ், புரட்சி சிங்கங்கள் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் தங்ககோபிநாத் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR