இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள்!

திரையரங்குகளில் வெளியான சில திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளன.  

Written by - RK Spark | Last Updated : May 23, 2022, 03:25 PM IST
  • காத்துவாக்குல ரெண்டு காதல் மே 27ம் தேதி வெளியாகிறது.
  • ஜிவி நடித்த ஐங்கரன் படம் இந்த வாரம் வெளியாகிறது.
  • மேலும் சில சிறிய படங்களும் இந்த வாரம் வெளியாகிறது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள்! title=

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்ட திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.  இப்படத்தினை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்தது.  நகைச்சுவை கலந்த காதல் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் பிரபு, கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  திரையரங்குகளில் வெளியான இப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகுகிறது.  

மேலும் படிக்க | அஜித்தைத் தொடர்ந்து சூர்யாவைக் குறிவைக்கும் சிறுத்தை சிவா!

அடுத்ததாக டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவான மலையாள மொழித்திரைப்படமான 'ஜன கன மன' இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.  சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த படத்தில் பிரித்விராஜ், சுராஜ், ஸ்ரீதிவ்யா, மம்தா மோகன் தாஸ், பசுபதி ராஜ் போன்ற பலர் நடித்து இருந்தனர்.

janaganama

அடுத்ததாக பிரவீன் இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள கிரைம் த்ரில்லர் படமான 'போத்தனுர் தபால் நிலையம்' படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.  இப்படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  இந்த படத்தில் பிரவீன், அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், சீதாராமன் போன்றோர் நடித்துள்ளனர்.  

Aingaran

அதனையடுத்து ரவி அரசு இயக்கத்தில் தமிழில் உருவான ஆக்ஷன் கலந்த கிரைம் த்ரில்லர் படமான 'ஐங்கரன்' இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.  இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | மீண்டும் விஜய்யுடன் இணைவதை உறுதிப்படுத்திய யுவன் ஷங்கர் ராஜா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News