உள்ளாட்சி அமைப்பின் முன்னாள் தலைவரின் சகோதரர் சனிக்கிழமை கொல்லப்பட்டதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் (Cuddalore District) வன்முறை மோதல்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வன்முறை மோதல்களில், தாழங்குடா கிராமத்தில் (Thazhanguda Village) மீன்பிடி படகுகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கடலுக்கு அருகில் படகுகள் கொழுந்து விட்டு எரிந்த நிலையில், தீயணைப்பு வண்டிகள் கரைக்கு அருகில் செல்ல முடியாமல் போனதால், உதவியற்ற தீயணைப்பு வீரர்கள், மணலை வீசி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.


சில வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. வீடுகள் மற்றும் படகுகளுக்கு தீ வைத்த பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.


கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களில் ஏற்பட்ட மனக் கசப்புதான் இதற்குக் காரணம் என போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு, 2019 டிசம்பரில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பஞ்சாயத்து யூனியங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மோதல்களுக்குப் பின்னர் இப்பகுதியில் பாதுகாப்புக்காக சுமார் 200 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


"படகுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.  இரு குழுக்களுக்கிடையேயான முந்தைய பகைதான் அடிப்படைக் காரணம் என்று தோன்றுகிறது. நாங்கள் போதுமான போலீஸ் படையை இங்கு நிறுத்தியுள்ளோம். நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என்று கடலூர் எஸ்பி எம் ஸ்ரீ அபினவ் தெரிவித்தார்.


மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய நிலையில், லாக்டௌனுக்கு மத்தியில் வெளி வந்துள்ள முதல் பெரிய வன்முறை சம்வவமாக இது கருதப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. 


ALSO READ: தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.... ஒரே நாளில் 99 பேர் பலி...