ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன், வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து 6 நாட்களாக நடத்திவந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 6 நாட்களாக வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன், உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையினை ஏற்று, உண்ணாவிரத திரும்ப பெற்றார் என்று அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


வேலூர் சிறையில் பாதுகாப்பு இல்லை என கூறி புழல் சிறைக்கு மாற்றக்கோரி முருகன் உண்ணாவிரதம் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது நீதிமன்ற கோரிக்கையினை ஏற்று தனது உண்ணாவிரதத்தினை கைவிட்டுள்ளார்.


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், கடந்த மாதம் 18-ஆம் தேதி முருகன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முருகன் தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இதனைத்தொடர்ந்து சிறையில் இருந்து செல்போன் பறித்தாக தன் மீது வேண்டும் என்றே சிறை துறை அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். தன் மீது குற்றம்சாட்ட வேண்டும் என பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர் என கூறி, தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என முருகன் உண்ணாவிரதத்தினை துவங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த 11-ஆம் தேதி முதல் உண்ணாவிதர போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த முருகன் இன்று தனது போராட்டத்தினை கைவிட்டார்.


சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV-ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.