மு.க. ஸ்டாலின் வாழ்க - பாரதியார் நினைவு நாளில் இளையராஜா புகழாரம்
“தமிழ்நாடு அரசு பாரதியார் நினைவு நாளை மகாகவி நாள் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க! மு.க.ஸ்டாலின் வாழ்க” இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில் பலரும் பாரதியாரின் கவிதைகளை பகிர்ந்து மரியாதை செலுத்திவருகின்றனர். இதற்கிடையே பாரதியார் இறந்தநாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாள் என அழைக்கப்படுமென்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் இளைஞானி தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதியார் நினைவு நாளை மகாகவி நாளாக அறிவித்த தமிழ்நாடு அரசு வாழ்க. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்க என பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, ‘நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என்று அவன் தன்னை தானே நொந்துகொண்டானில்லையா? ‘நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ அவனை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெட புழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை வருத்தும். அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் என் பட பாடலில் நான் பதில் சொல்லியிருக்கிறேன். அழகி படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘உன் குத்தமா என் குத்தமா’ பாடலில் வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு என்று பாரதிக்கு நான் ஆறுதல் சொல்லியிருக்கிறேன்.
பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை. நாட்டை பற்றி அவன் எப்படி கற்பனை செய்து வைத்திருக்கிறான் என நினைத்தால் வியக்க வைக்கிறத்து. இன்று நதிகள் இணைப்பு திட்டத்தைப் பற்றி நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவன் சிறுவயதில் நதிகள் இணைப்பு திட்டத்தை அப்போதே கற்பனை செய்திருக்கிறான்.
அவனை நினைத்து நாம் மரியாதையும், வணக்கமும், அஞ்சலி செலுத்துவது நமக்கு புண்ணியம் சேர்க்கும். பாரதியாரின் நினைவு நாளை நினைவில் கொண்டு தமிழக அரசு இந்த நாளை அவரின் பெயரால் அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க! மு.க.ஸ்டாலின் வாழ்க” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | கொடைக்கானலுக்கு சுற்றுலா போறீங்களா? உஷார் மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ