கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்  செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்பி ஆ ராசா சனாதனம் குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி பேசியதாக கலவரத்தை உண்டாக்க பார்க்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட திட்டத்தில் சனாதன பற்றி உள்ளது மேல் ஜாதி, கீழ் சாதி என படத்தோடு உள்ளது.இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்த அவர் இதனை நீக்கவில்லை என்றால் இந்த பாட திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்க வேண்டிய சூல்நிலை வரும் என அண்ணாமலையை பார்த்து பகிரங்கமாக கேட்கிறேன் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து தற்போது உள்ள திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக மேற்கொண்டு வருகிறது என குற்றம்சாட்டினார்.


மேலும் கோவை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்ற அனைத்து இடத்திலும் சிசிடிவி காட்சிகளின் அடிபடையில் உண்மையை கண்டறிந்து ,எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்றாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அக்டோபர் 2ஆம் தேதி,காந்தியை சுட்டு கொண்ட அந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பேரணி நடத்த சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என தெரிவித்தார்.


மேலும் படிக்க | வெளிநாட்டு வேலை To அரசியல்... ஏன் தெரியுமா?... அனுபவம் பகிரும் அமைச்சர்


அண்ணாமலை வன்முறையை தூண்ட கூடிய வகையில் பேசுகிறார்.இவரது பேச்சு சமூக விரோதிகளுக்கு ஊக்கமாளிப்பதாக உள்ளது என குற்றம்சாட்டினார். தேசிய பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 3மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை எனவும் இதனை கவனத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் காலம் தாமதம் இல்லாமல் தமிழக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ