உண்மை. உழைப்பு.. உயர்வு... இதுவே என் மந்திரம்!
நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அரசியல் அறிவிப்பு வரவேற்று ரஜினி ரசிகர்கள் வெடி வைத்து கொண்டாட்டம்!
உண்மை. உழைப்பு.. உயர்வு... இதுவே என் மந்திரம்! : ரஜினிகாந்த்
யார் தவறு செய்தாலும் தட்டிக்கெட்கும் காவலர்கள் நாட்டிற்கு வேண்டும்
எனக்கு தொண்டர்கள் வேண்டாம்; காவலர்கள் தான் வேண்டும்
பழைய காலத்தில் அடுத்த நாட்டு கஜானாவை கொள்ளையடிப்பார்கள் இப்போ சொந்த நாட்டிலேயே, சொந்த பூமிலேயே கொள்ளையடிக்கிறார்கள்
இந்த நேரத்தில் நான் முடிவெடுக்காவிடில் குற்ற உணர்வு நான் சாகும் வரை இருக்கும்
பெயர், புகழ், பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரப்போவதில்லை
அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது; ஜனநாயகம் சீர்க்கெட்டுப்போய் விட்டது
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்
வரும் சட்டசப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டி இடுவேன்.
கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன்.
யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய்.
யுத்தத்தில் தோற்றால் இறப்பாய் யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள்.
நான் அரசியலுக்கு வருவது உறுதி.
09:07 31-12-2017
தனி கட்சி ஆரம்பிப்பேன்: ரஜினி
09:02 31-12-2017
ராகவேந்திரா மண்டபம் வந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
08:59 31-12-2017
இன்னும் சற்று நேரத்தில் தனது முடிவை அறிவிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.
ஜினிகாந்த் இன்று அரசியலில் குதிக்கப் போவதாக செய்திகள் பரவி வருகின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் அவர் அரசியலுக்கு வருவது போன்ற பேச்சுகள் காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த 26-ம் தேதி முதல் ரஜினி 2-வது முறையாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். முதல் நாளன்று அரசியல் களத்தில் இறங்குவது குறித்து கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ 31-ம் தேதி கூறுகிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று ரஜினி கூறிய 31-ம் நாளில் ஏதேனும் அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று தென் சென்னை ரசிகர்களை சந்திக்கிறார். அப்போது தனது அரசியல் பிரவேசம் குறித்த முழு அறிவிப்பையும் அறிவிக்கிறார் என்று கூறப்படுகிறது.