ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறுதலாக தவறி விழுந்தார். அப்பொழுது முதல் தற்போது வரை 70 மணி நேரமாக (நான்கு நாள்) தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது, என்ற போதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. விரைவில் சுர்ஜித்தை மீட்போம் என மீட்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


குழந்தை சுவாசிப்பதற்கு ஏற்றார் போல், தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். 


இது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்விட்டரில், " குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தாம் பிரார்த்திப்பதாகவும், குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுர்ஜித் பாதுகாப்பாக  இருப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதிவிட்டுள்ளார்.