முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது தமிழக அரசின் பரோலில் வெளியே உள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக பேரறிவாளனுக்கு தொடர்ந்து 10வது முறையாக தமிழக அரசு பரோல் வழங்கியது. இந்நிலையில் ஜாமின் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இன்று அவருக்கு ஜாமீன் கிடைத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேரறிவாளன் ஜாமீன் குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கால்நூற்றாண்டு சட்டப்போராட்டத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார்.


அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:


தம்பி பேரறிவாளனுக்குப் பிணை!
கால்நூற்றாண்டு சட்டப்போராட்டத்தின் முக்கிய மைல் கல்!


முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ள செய்தியறிந்தேன். நீதியரசர் நாகேஷ்வர்ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள முதன்மைத்துவம் வாய்ந்த இம்முடிவை வரவேற்கிறேன்! 


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கினை முன்னின்று நடத்திய மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய கோபால் சங்கரநாராயணன் அவர்களுக்கும், எனது அன்புத் தம்பிகள் வழக்கறிஞர்கள் பாரிவேந்தன், பிரபு இராமசுப்பிரமணியன் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும் படிக்க | பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்! 



இவ்வழக்கின் விசாரணை வளையம் முழுமையாக விரிவடையாத நிலையில், நேர்மையாக விசாரணை இதுவரை நடத்தப்படாதச்சூழலில், செய்யாதக் குற்றத்திற்காக முப்பது ஆண்டுகாலத்தைச் சிறைக்கொட்டடிக்குள்ளேயே கழித்த தம்பி பேரறிவாளனுக்குத் தற்போது பிணை கிடைத்திருப்பது பெரும் ஆறுதலைத் தருகிறது. 


கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நடந்தேறியச் சட்டப்போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு மிக முக்கியமானதொரு மைல் கல்லாகும். தற்போது கிடைக்கப்பெற்றிருக்கிற பிணை எனும் தற்காலிகத்தீர்விலிருந்து விடுதலை என்பதனை நோக்கி நகர்த்திச்செல்வதே முழுமையான மகிழ்ச்சியைத் தரும் நல்லறிவிப்பாகும். அதனை சாத்தியப்படுத்த தம்பி பேரறிவாளனுக்கு முழுமையாகத் துணைநிற்க வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் படிக்க | கர்நாடக உள்துறை அமைச்சரை சந்தித்து பாதுகாப்பு கேட்கும் தமிழக அமைச்சரின் மகள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR