கர்நாடக உள்துறை அமைச்சரை சந்தித்து பாதுகாப்பு கேட்கும் தமிழக அமைச்சரின் மகள்

புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதித்த அமைச்சர், இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் தொலைபேசி மூலம் பேசினார். அதனுடன் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார் அமைச்சர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 9, 2022, 06:30 PM IST
கர்நாடக உள்துறை அமைச்சரை சந்தித்து பாதுகாப்பு கேட்கும் தமிழக அமைச்சரின் மகள் title=

பெங்களூரு, மார்ச் 9: தமிழக சமய அறநிலையத்துறை அமைச்சர், பி.சேகர் பாபுவின் மகள், இன்று, கர்நாடக உள்துறை அமைச்சர், ஸ்ரீ அரக ஞானேந்திராவை சந்தித்து, தனக்கும், தன் கணவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுமணத் தம்பதிகளான ஜெயகல்யாணி (24), சதீஷ் (27) ஆகியோர் இன்று மதியம் கூடுதல் போலீஸ் கமிஷனரைச் சந்தித்து, தங்கள் உயிருக்கு பாதுகாப்புக் கோரி உள்துறை அமைச்சரிடம் முறையிட்டனர். பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்த அவர், தனது கணவர் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், அதனால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார்.

எம்.பி.பி.எஸ்., பட்டதாரி எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஜெயகல்யாணி, சதீஷ் என்பவரை, பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அமைச்சர் மகள் : காரணம் என்ன?!

புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதித்த அமைச்சர், இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் தொலைபேசி மூலம் பேசினார். அதனுடன் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்த அமைச்சர், இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் கமல் பந்தைச் சந்திக்கவும் அறிவுறுத்தினார்.

முன்னதாக, தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் தனது விருப்பத்தின் பேரில் காதல் திருமணம் செய்துக்கொண்டார். தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு வேண்டும் என்றுக் கூறி தனது கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வீடியோவில் "நானும் என் கணவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இரண்டு பேரின் விருப்பத்தின்படி தான் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம். நாங்கள் இருவரும் மேஜர், என்னை கட்டாயப்படுத்தி யாரும் திருமணம் செய்து வைக்கவில்லை. நான் மருத்துவம் படித்துள்ளேன். எனது கணவர் டிம்ளோமோ படித்துள்ளார். எனது கணவரையும், அவரது குடும்பத்தையும் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். தமிழ்நாடு போலீஸ் எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : மனைவியின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News