நடிகர் விஜய் சேதுபதி மிகவும் பிஸியாக பல படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தெரிந்த நடிகராக தற்போது வலம் வருகிறார்.  கடந்த வருடம் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார்.  இப்படத்திற்கு 800 என பெயர் வைத்து, இப்படத்திற்கான வேலைகளும் தொடர்ந்து நடைபெற்றது.  விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என்று இலங்கை தமிழர்களும், நாம் தமிழர் கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இந்த எதிர்ப்பு ஒரு கட்டத்தில் பெரியதாக, விஜய் சேதுபதி "நன்றி வணக்கம்" என்று கூறி இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் நடிப்பதில் இருந்து விலகினாலும் தொடர்ந்து அவருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் கருத்து மோதல் இருந்து கொண்டே வந்தது.  தொடர்ந்து விஜய் சேதுபதி தமிழன் இல்லை தெலுங்கன் என நாம் தமிழர் கட்சியினர் கூறி வருகின்றனர்.  சமீபத்தில் விஜய்சேதுபதி - பார்த்திபன் நடித்த துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியிலும், இணையத்தில் வெளியானது.  இப்படத்தின் டிரைலர் வெளிவந்த போது அதில் உள்ள அரசியல்வாதியின் பெயர் ராசி மான் என்று குறிப்பிட்டிருந்தது.  இதனை எதிர்த்த நாம் தமிழர் கட்சியினர் சீமானை தான் ராசிமான் என்று இப்படத்தில் கிண்டல் செய்து உள்ளனர். இதற்கு விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டு படத்திலிருந்து அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதன் பின்பு ராசிமான் என்ற பெயர் படத்தில் ராயப்பன் என மாற்றப்பட்டுள்ளது.


செப்டம்பர் 9ம் தேதி திரையரங்கில் வெளியான லாபம் படத்திற்காக  அனைத்து சேனல்களுக்கும் பேட்டியளித்தார் விஜய்சேதுபதி.  அதில் உங்களுடைய எதிரிகளை பற்றி சொல்லுங்கள் என்ற கேள்விக்கு விஜய்சேதுபதி "போங்கடா வெண்ணைகளா" என்று பதிலளித்தார்.  இதனால் மீண்டும் நாம் தமிழர் கட்சியினர் கோபம் அடைந்தனர்.  இந்த கோபத்தை வெளிப்படுத்த தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் லாபம் மற்றும் துக்ளக் தர்பார் திரைப்படங்களைப் பற்றி தவறுதலாக, படம் நன்றாக இல்லை என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  இதற்கு விஜய் சேதுபதி மீண்டும் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 




 


மேலும் தற்போது  விஜய் சேதுபதி மீது பொதுவாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அவர் நடிக்கும் படங்கள் சரியான லாபம் கிடைக்காமல் இருந்தாலும் அவரது சம்பளம் உயர்ந்து கொண்டே செல்கிறது.  எங்கு திரும்பினாலும் விஜய்சேதுபதியே உள்ளார்,  திரையரங்கு சென்றால் லாபம் திரைப்படம்,  ஓடிடி சென்றால் அனபெல்லா சேதுபதி,  தொலைக்காட்சி பார்த்தால் துக்ளக் தர்பார், வாட்ஸ்அப் சென்றாள் விஜய் சேதுபதியின் வாழ்க்கை தத்துவங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சி பார்த்தால் விஜய் சேதுபதி மாஸ்ட்டர் செப் என திரும்பும் இடமெல்லாம் தற்போது விஜய்சேதுபதி காணப்படுகிறார் என்று தற்போது இணையத்தில் மீம்கள் மூலியமாகவும் வலம் வருகிறார் விஜய் சேதுபதி.


ALSO READ விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த நான்கு படங்களின் அப்டேட்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR