தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பதிலாக, ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்துவந்த பன்வாரிலால் புரோகித்துக்கு சில தினங்களுக்கு முன்னதாக பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. 


அதோடு, சண்டிகர் ஒன்றிய பகுதியின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். தற்போது, தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து பன்வாரிலால் புரோஹித்தை விடுவித்த குடியரசுத் தலைவர், புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.



நாகலாந்து ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த ஆர்.என்.ரவிக்கு பதிலாக அசாம் கவர்னர் ஜெகதீஷ் முகி நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, உளவுப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றியவர்.


உளவு துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் என முக்கியமான பல பதவிகளை வகித்து வந்த ஆர்.என். ரவி 1976-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்சில் பணியில் இணைந்தவர்.
 
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி எப்போது பதவியேற்றுக் கொள்வார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 


Also Read | தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR