Nainar Balaji Property Issue: சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள 5,430 சதுர மீட்டர் கொண்ட இடத்தினை நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் பாஜக இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி, இளையராஜா என்பவரிடமிருந்து கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த பதிவு ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்று உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரைய ஒப்பந்தம் பதிவு ரத்து 


இந்த நிலையில் இந்த கிரைய ஒப்பந்த பத்திரம் பதிவு செய்யப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த நிலையில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்திக்கும் போது நயினார் பாலாஜி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். 


அந்த வகையில், நெல்லை மண்டல பத்திரப்பதிவுத்துறை டிஐஜி மோசடி ஆவணங்கள் மூலம் நயினார் பாலாஜி கிரைய ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பதிவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 


அரசியல் காழ்ப்புணர்ச்சி


இந்த விவகாரம் தொடர்பாக பாஜக இளைஞரணி மாநில துணைத்தலைவரும், பாஜக நெல்லை எம்எல்ஏவின் மகனுமான நயினார் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள சொத்து ஒன்றுக்காக நான் பதிவு செய்த கிரைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக ஊடகங்கள் மூலம் தகவல்கள் கிடைத்தது. எங்களுக்கு பதிவுத்துறை மூலம் ஒப்பந்த பத்திரம் ரத்துக்கு முன்பும் பின்பும் எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.  


மேலும் படிக்க | காணாமல் போன 10ஆம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்பு..! நடந்தது என்ன?


முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது தவறானது. இந்த விவகாரம் தொடர்பாக எங்களை நீதிமன்றத்தில் நாடச் சொல்லி பதிவுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில், பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யவேண்டும் என நாங்கள் சென்ற உடனேயே பதிவு செய்து தரவில்லை. 


'77ஏ பிரிவு சிவில் சட்டத்திற்கானது'


அதிகாரிகள் எங்கள் பதிவு தொடர்பாக உரிய விசாரணை நடத்திய பின்னரே எங்களுக்கு கிரைய ஒப்பந்தம் போட்டுக் கொடுத்துள்ளனர். விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. இளையராஜா என்பவரிடம் இருந்து கிரைய ஒப்பந்தம் மட்டுமே பதிவு செய்துள்ளோம். எங்களது பதிவை 77ஏ பிரிவின்படி ரத்து செய்து இருப்பதாக பதிவுத்துறை அறிவித்திருக்கிறது. 77ஏ பிரிவை பயன்படுத்தி பல மோசடியான செயல்கள் நடந்து வருகிறது. இந்த பிரிவு சிவில் சட்டத்திற்கானது என நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. 


77ஏ பிரிவை பயன்படுத்தி பத்திர பதிவுகள் ரத்து செய்யக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி 77ஏ பிரிவை பயன்படுத்தி எங்களது பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. விருகம்பாக்கத்தில் உள்ள இடத்தை முறையான ஆவணங்கள் அடிப்படையிலேயே வாங்கி உள்ளோம். அதனை சென்னை மாவட்ட பதிவாளர் சத்திய பிரியா உறுதி செய்து ஆணை பிறப்பித்துள்ளார். ஆனால் அதே அதிகாரி தற்போது ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது எங்களுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.


குலாப் தாஸ் என்பவரிடமிருந்து பெறப்பட்ட பவரின் அடிப்படையிலேயே அவர்களின் வாரிசுகளான இளையராஜா எங்களுக்கு அந்த சொத்தை கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார். இளையராஜா போலியான நபர் எனவும் ஏற்கனவே பல சொத்துக்களை போலியான முறையில் விற்பனை செய்து உள்ளார் எனவும் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. என்மீதும் இதே போல் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற மூலம் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். 


'பாஜக மீதா தாக்குதல்'


மும்பை நீதிமன்றத்தில் இருந்து உரிய சான்றிதழ்கள் பெறப்பட்டு சொத்து பதிவின்போது கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நாராயண கிராமி என்பவர் இடத்தை விற்பனை செய்துள்ளார். அதன் அடிப்படையில் சொத்து விற்பனை கிரையம் போட்டுள்ளோம். உச்சநீதிமன்றம் வரை எதிர் தரப்பினர் வழக்கு தொடர்ந்து அனைத்து மனுக்களும் தள்ளுபடி ஆகியுள்ளது. நாங்கள் பதிவு செய்துள்ள ஒப்பந்தத்தில் மோசடி என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. 


அரசு காழ்புணர்ச்சி காரணமாகத்தான் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் சொத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. டிஐஜி ரத்து செய்த உத்தரவை ஐஜி இடம் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். உயர் நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர இருக்கிறோம். முறையாக ஆவணங்களை வைத்து பதிவு செய்யப்பட்டுள்ள சொத்து ரத்தாகி இருப்பது அரசு செய்யும் பாஜகவின் மீதான தாக்குதலாக இருக்கலாம் என தோன்றுகிறது" என தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஜூலை 28ஆம் தேதி அண்ணாமலை நடைபயணம்: பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ