Nainar Nagenthiran Latest News: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (ஏப். 6) இரவு தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் நான்கு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காவல்துறையினர் இணைந்து கைப்பற்றியினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காவல்துறையினர் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.


3 பேர் கைது


திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சொந்தமான ஹோட்டல் என கூறப்படும் ப்ளூ டைமண்ட் ஓட்டலில் இருந்துதான் இந்த நான்கு கோடி ரூபாய் பணம் கொண்டுவரப்பட்டதாக கைது செய்யப்பட்ட மூவரும் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | பாஜக அண்ணாமலை இதற்கு பதில் சொல்ல வேண்டும்! நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி!


அந்த வகையில், விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் கைது செய்யப்பட்ட நவீன், சதீஷ், பெருமாள் ஆகிய மூவரும் வெவ்வேறு இடங்களில் இருந்து இந்த பணத்தை ஒன்று சேர்த்து கொண்டு சென்றுள்ளனர்.


பல இடங்கள் மூலம்... 


சென்னை பசுமைவழிச் சாலை விடுதி ஒன்றில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொண்டு வந்துள்ளனர். அதேபோல் சென்னை யானை கவுனி பகுதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொண்டுவந்துள்ளனர். அதேபோல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு தொகையாக ஒன்று சேர்த்து இந்த நான்கு கோடி ரூபாயை அவர்கள் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கார் மூலமாக கொண்டு சென்றால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விடுவார்கள் என்று துணிப்பையில் வைத்து மறைத்து ரயிலில் கொண்டு சென்ற போது பறிமுதல் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.


நயினார் நாகேந்திரன் லெட்டர் பேட் மூலம்...


மேலும் இவர்கள் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நயினார் நாகேந்திரன் லெட்டர் பேட் மூலமாக ரயிலில் ஏசி பெட்டியில் முன்பதிவு செய்து பயணித்திருப்பதும் பெரியவந்துள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பாஜக பிரமுகரிடம் பணம் பிடிப்பட்ட விவகாரம் வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்து உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்திருந்தார். 


தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான நயினார் நாகேந்திரன் பெயர் இந்த சம்பவத்தில் அடிப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. குறிப்பாக, எம்எல்ஏவாக இருக்கும் அவர் தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். ஒருவேளை திருநெல்வேலியில் அவர் வெற்றி பெறும்பட்சத்தில் மத்திய அமைச்சராகும் வாய்ப்பும் அவருக்கு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அந்த வகையில், இச்சம்பவம் அக்கட்சியிலும் சற்று பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. 


நயினார் நாகேந்திரன் விளக்கம்


இந்நிலையில், சென்னை தாம்பரத்தில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து நயினார் நாகேந்திரன் தற்போது மௌனம் கலைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளியூர், காவல் கிணறு, வடக்கன்குளம் ஆகிய பகுதிகளில் இன்று நயினார் நாகேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களிடம் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அப்போது கேட்டுக்கொண்டார். பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னையில் நான்கு கோடி ரூபாய் ரயில்வே நிலையத்தில் வைத்து பிடிபட்டது குறித்து கேட்டபோது,  "பிடிபட்ட பணத்திற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இது குறித்து திமுகவினர் வழக்கு தொடுக்க அவசியம் இல்லை. அவர்களின் பணமா களவு போனது? இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை" என பதிலளித்தார்.


மேலும் படிக்க | கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. டிஆர்பி ராஜா கோரிக்கை - ஓகே சொன்ன சிஎம் ஸ்டாலின்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ